நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ணா ப்ரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே ஜெயாபதாக சுவாமின் இதி நாமினே
நமோ ஆச்சார்ய பாதாய நித்தாய் க்ருபா பிரதாயினே
கௌர கதா தாம தாய நகர கிராம தாரிணே
நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ணா ப்ரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே பக்திவேதாந்த சுவாமின் இதி நாமினே
நாமஸ்தே ஸாரஸ்வதே தேவே கௌர வாணி பிரச்சாரினே
நிர்விஷேஷ ஷுன்யவாதி பாஸ்சாத்ய தேஷ தாரிணே
அன்புள்ள கொண்ட குருமஹாராஜ் ஜெயப்பதாக ஸ்வாமிக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொண்டு துவங்குகிறேன்.
குருமஹாராஜுக்காக தினமும் ஒரு மாலை ஜெபிக்கின்றேன். ஏன் என்றால் சம்சார பள்ளத்தில் வீழ்ந்த ஆத் மாக்களை கரைசேர்க்க பகவானின் பிரதிநிதியால் தான் முடியும். ஆகையால் குருமகராஜிக்கு குடுத்த வாக்கை தினமும் நிறை வேற்றுகின்றேன்.பதினாறு மாலைகள் ஜபிக் கின்றேன். நான்கு விதி முறைகளை பின்பற்றுகிறேன். வாரந் தோறும் கோவிலுக்கு சென்று சேவை செய்கிறேன். இன்னும் சேவை செய்ய ஆவலாக உள்ளேன். எனக்கு உடல் நிலையில் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டாலும் ஜெயப்பதாக ஸ்வாமியை நினைத்து கொண்டால் அந்த பிரச்சினை சரியாகி விடும் .இதுபோல் அனைவரின் பிரச்சனையும் தீர்க்கும் சக்தி கொண்டவர் குருமஹாராஜ்.
அவரின் நலனை எண்ணி விடை பெரும் சேவகி
திவ்யலீலா தேவகி தேவ தாசி (Diksa)
Sri Pancatattva Sevaks, Ramamurthy Nagar, Bengaluru, India