நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ணா ப்ரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே ஜெயாபதாக சுவாமின் இதி நாமினே
நமோ ஆச்சார்ய பாதாய நித்தாய் க்ருபா பிரதாயினே
கௌர கதா தாம தாய நகர கிராம தாரிணே
நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ணா ப்ரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே பக்திவேதாந்த சுவாமின் இதி நாமினே
நாமஸ்தே ஸாரஸ்வதே தேவே கௌர வாணி பிரச்சாரினே
நிர்விஷேஷ ஷுன்யவாதி பாஸ்சாத்ய தேஷ தாரிணே
அன்புள்ள ஜெயபதாக சுவாமி குருமஹாராஜ்க்கு விமலா யசுமதி தாழ்ந்த மரியாதையுடன் எழுதுவது என்னவென்றால் - தாழ்வான நிலையில் பள்ளத்தில் வீழ்ந்த ஆத்மா க்கலை நல்வழி காட்டுப்பவரான பகவானின் பிரதிநிதி தாங்கள். தாங்கள் நலமுடன் இருக்க தினமும் நான்கு சுற்றுகள் ஜபிக்கின்றேன். ஏனென்றால் என்னை போன்ற வீழ்ந்த ஆத்மாக்களுக்கு நல்வழி காட்டுபவர் குருமஹாராஜ் ஆகையால் அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்ற நான் தினமும் பதினாறு மாலை ஜபம் செய்கிறேன். நான்கு கட்டளையையும் பின்பற்றுகிறேன். முடிந்த சேவையை செய்கிறேன். இன்னமும் செய்ய ஆசைப்படுகிறேன்.
இப்படிக்கு
தங்கள் கீழ்படிந்த சேவகி,
விமலாயசுமதி தேவி தாசி