நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ணா ப்ரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே ஜெயாபதாக சுவாமின் இதி நாமினே
நமோ ஆச்சார்ய பாதாய நித்தாய் க்ருபா பிரதாயினே
கௌர கதா தாம தாய நகர கிராம தாரிணே
நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ணா ப்ரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே பக்திவேதாந்த சுவாமின் இதி நாமினே
நாமஸ்தே ஸாரஸ்வதே தேவே கௌர வாணி பிரச்சாரினே
நிர்விஷேஷ ஷுன்யவாதி பாஸ்சாத்ய தேஷ தாரிணே
ஜெய் குருதேவ்!
ஹரே கிருஷ்ணா,
அன்புள்ள பகவனின் பிரதிநிதியான ஜெய பதாக சுவாமி குருமஹாராஜுக்கு லீலா நந்தினி சேவகி எழுதுவது பணிவான வணக்கத்துடன் துவங்குகிறேன்.
பௌதிக சாக்கடையில் புழுக்கள் போல் இருந்த எங்களை மணித்தபிரவின் அர்த்தத்தை தெரிவித்த தங்களின் சேவகர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். காட்டுத்தீயின் தாக்கத்தை தீர்க்கும் மேகமாக வந்து மழை பொழியும் கருனைக் கடலாகிய ஜெயபதாக ஸ்வாமி குருமஹாராஜுக்கு, நான் இன்னமும் எந்த சேவையும் செய்யவில்லை. செய்யனும் என்று முயற்சிக்கிறேன் முயற்சியில் சற்று முன்னேற. குருமஹாராஜ - கருணை வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
பௌதீகத்தில் எவ்வளவு இன்னல்கள் பிரச்சனைகள் வந்தாலும் பதினாறு மாலை ஜபிப்பதையும், நான்கு விதிமுறை களையும் கடைபிடிக்கின்றேன். குருமஹாராஜுக்காக தினமும் நான்கு சுற்றுகள் ஜபிக்கிறேன். ஏகாதசியன்றும் துவதாசியன்றும் அதிக சுற்றுகள் ஜபிக்கிறேன். பண்டிகை காலங்களில் அதிக சுற்றுக்கள் ஜபிக்கிறேன்.
மன நிறைவுடன் தாசருக்கு தாசருக்கு தாசருக்கு தாசருக்கு தாசராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு கிடைத்த இந்த பாக்கியத்தை இன்னும் பௌதீக ஆத்மாக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் கடல்போல் பிரச்சனையை பணிபோல் ஆக்கவும் தாண்டமுடியா பிரச்சனையை கன்றுவின் கால் குலம்பில் உள்ள நீரை தாண்டுவது போல மாற்றவும் பகவானின் பிரதிநிதியான ஜெயப்பதாக சுவாமி குருமஹாராஜல் மட்டும் முடியும் அதற்காக வேண்டி ஆன்மீக குருவின் சேவகி சேவகி
லீலநந்தினி லலிதா தேவி தாசி (Diksa)
Sri Pancatattva Sevaks, Ramamurthy Nagar, Bengaluru, India