Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Seviyā Hariṇī devī dāsī (Bangalore - India)

ஜெய் குருதேவ்
 

நமஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரஷ்தாய பூதலே,
ஸ்ரீமதே ஜெயப்பதாக ஸ்வாமின் இதி நாமினே| 
நமோ ஆசார்ய பதயா நிதாய் க்ருப ப்ரதாயினே,
கௌர காதா தமொதாய நகர கிராம தாரினெ||


ஸ்ரீல பிரபுபாதா அவர்களின் கட்டளைகளை நிறைவேற்ற பாடுபடுபவர் தான் திரு ஜெயபதாக ஸ்வாமி குருமஹாராஜ். அவருடைய தாமரை திருபாதங்களுக்கு எனது தாழ்மையான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
 

அமெரிக்காவில் பெரிய செல்வந்தர் வீட்டில் பிறந்தும் கூட அவருடைய குரு சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக அவரின் வசதியான வாழ்க்கையை விட்டு, மாயாப்பூரில் அவர் வாழ்ந்து அங்கிருந்த தரிசல் நிலங்களை உழுது விவசாயம் செய்து, பெரும் வளர்ச்சி அடைய செய்தவர் தான் என்னுடைய குருமகராஜ்.
 

அவருடைய குருவின் கட்டளைகளை நிரவேற்றுவதற்காக பௌதீக உலகில் கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிப்பது தான் அவருடைய வாழ்க்கையாக வாழ்கிறார்.
அவரின் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் கூட அதை பெரிய விஷயமாக அதனை பொரு ட்படுத்தாமல் தினமும் பிரசாரம் செய்து கொண்டீருகிறார்.
 

உங்களுடைய வாழ்க்கை முழுவதுமே குருவின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமம் யோசித்து கொண்டும் செயல் படுத்தி கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
 

எந்த வித தகுதியும் இல்லாத எனக்கு தீக்க்ஷை அளித்தவர் தாங்கள். அந்த அளவிற்கு உங்களது கருணையை அளிக்கிறீர்கள். தீக்க்ஷை வாங்குவதற்காக கோயம்புத்தூர் செல்வதாக இருந்தது, ஆனால் அப்பொழுது அங்கு தீட்சை அளிக்கவில்லை என்ற செய்தி வந்தது. மறுபடியும் சென்னையில் அளிப்பதாக இருந்தது .அங்கும் இல்லை என்ற செய்தி வந்தது. இதனால் நான் மிகவும் வருந்தினேன். குருவின் கருணை எனக்கு கிடைக்கவில்லை என்று. அவருடைய கருணையை வாங்க தகுதியில்லாதவள் என்று வருந்தினேன். ஆனால் குருவின் கருணையினால் அவர் வசிக்கும் இடமான மாயாப்பூர் தாமில் எனக்கு தீட்சை வழங்கினார்.
மற்றவர்களின் பாவங்களை தாமே ஏற்று கொண்டு அவர்களுக்கு கருணையை அளிப்பவர் தான் என் ஜெயபதாக சுவாமி குருமகராஜ்.
 

அப்பேற்பட்ட என் குருவிற்கு என் வாழ்நாள் முழுவதும் நான் சேவை செய்ய கடமைபட்டுள்ளேன்.

அவருடைய தாமரை திருப்பாதங்களை மீண்டும் வணங்குகிறேன், 
இப்படிக்கு உங்களுடைய சேவகி,
சேவியா ஹரிணி தேவி தாசி (Diksa)

Sri Pancatattva Sevaks, Ramamurthy Nagar, Bengaluru, India