Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Sunanda Vāsudeva dāsa (Thuraiyur - India)

ஈரேழு பதினான்கு லோகங்களையும் காத்தருள வந்துள்ள எமது குருவின் தாமரை மலர் பாதங்களுக்கு அவரது 70வது வியாசபூஜை நன்னாளில் அர்ப்பணிக்கப்படும் சப்தாதி நாமாவளிகள்.

 

  1. அகிலகுருவே போற்றி
  2. ஆதியின் கருணையே போற்றி
  3. இகத்தின் நன்மையே போற்றி
  4. ஈரேழு லோகத்தின் பிதாவே போற்றி
  5. உண்மையின் சொரூபமே போற்றி
  6. ஊக்கத்தின் இருப்பிடமே போற்றி
  7. எங்கெங்கும் நிறைந்துள்ளவரே போற்றி
  8. ஏற்றத்தின் வடிவே போற்றி
  9. ஐயங்களை நீக்குபவரே போற்றி
  10. ஒற்றுமையின் நிலையமே போற்றி
  11. ஓங்கார நாயகனே போற்றி
  12. ஒளடதமாக இருப்பவரே போற்றி
  13. கமல நாயகரே போற்றி
  14. காமத்தை வென்றவரே போற்றி
  15. கின்னரரும் பூஜிப்பவரே போற்றி
  16. கீதங்கள் உருவானவரே போற்றி
  17. குடும்பத்தின் பாசமே போற்றி
  18. கூத்தாடும் நேசனே போற்றி
  19. கெங்கா மைந்தனே போற்றி
  20. கேசவனின் புத்திரனே போற்றி
  21. கைங்கர்யம் கற்பிப்பவனே போற்றி
  22. கொள்ளையழகு கொண்டவனே போற்றி
  23. கோலோகவாசியே போற்றி
  24. கெளராங்கரின் பிரதிபிம்பமே போற்றி
  25. சகலமும் கற்றவரே போற்றி
  26. சாகர மேளாவே போற்றி
  27. சித்ராவின் அன்பே போற்றி
  28. சீதையின் ஸ்வரூபமே போற்றி
  29. சுகங்கள் தந்தருள்பவரே போற்றி
  30. சூடாமணித் திலகமே போற்றி
  31. செங்கமல நாயகரே போற்றி
  32. சேவகனின் சேவகனே போற்றி
  33. சைதன்யரின் திருவுருவே போற்றி
  34. சொரூபத்தில் நிலைத்தவரே போற்றி
  35. சோமனும் பூஜிப்பவரே போற்றி
  36. செளந்தர்யமானவரே போற்றி
  37. தளிரையும் நேசிப்பவனே போற்றி
  38. தானுவந்த மேனியனே போற்றி
  39. தித்திக்கும் உவமையே போற்றி
  40. தீனநாயகனே போற்றி
  41. துங்கபத்ராவின் புனிதமே போற்றி
  42. தூய்மையின் வடிவே போற்றி
  43. தென்திசையை கடாட்சித்தவரே போற்றி
  44. தேவரும் போற்றுபவரே போற்றி
  45. தைரியமானவரே போற்றி
  46. தொய்விலா வீரமே போற்றி
  47. தோரண வாயிலே போற்றி
  48. தெளஜீ மைந்தனே போற்றி
  49. மங்கள ஸ்வரூபமே போற்றி
  50. மாமுனிவரும் போற்றுபவரே போற்றி
  51. மின்னும் மாணிக்கமே போற்றி
  52. மீனாக ஆனவனின் மைந்தனே போற்றி
  53. முகுந்தனின் மகிழ்ச்சியே போற்றி
  54. மூப்பை வென்றவனே போற்றி
  55. மென்மேலும் சிறப்புற்றவனே போற்றி
  56. மேரு மலையும் பூஜிப்பவனே போற்றி
  57. மைந்நாகமும் வணங்குபனே போற்றி
  58. மொத்தமும் ஆனவனே போற்றி
  59. மோகத்தை களைபவனே போற்றி
  60. மெளனத்தின் இருப்பிடமே போற்றி
  61. நவத்வீபத்தின் திலகமே போற்றி
  62. சீமந்தத்வீப ஸ்ரவணமே போற்றி
  63. கோத்ருமத்வீப கீர்த்தனமே போற்றி
  64. மத்யத்வீப ஸ்மரணமே போற்றி
  65. கோலத்வீப பாதசேவனமே போற்றி
  66. ரிதுத்வீப அர்ச்சனமே போற்றி
  67. ஜானுத்வீப வந்தனமே போற்றி
  68. மோத்ருமத்வீப சேவகமே போற்றி
  69. ருத்ரத்வீப ஸக்யமே போற்றி
  70. அந்தர்த்வீப ஆத்ம நிவேதனமே போற்றி

சுனந்தவாசுதேவ தாஸர்

கந்தர்விகா மோஹினி தேவி தாஸி

கெளரிலக்ஷ்மி

சிவேஸ் குமார்

துறையூர் இஸ்கான்