ஹரே கிருஷ்ண
நம ஓம் விஷ்ணுபாதாய கிருஷ்ண பிரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே ஜெயபதாக ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய கிருப பிரதாயினே
கெளர கத தாம தாய நகர கிராம தாயினே.
குரு மஹராஜ் என்னை உங்களது சிஷ்யனாக ஏற்றுக் கொண்டதற்கு ரொம்ப நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு உண்மை உள்ளவனாகவும், நன்றி உள்ளவனாகவும் நடந்து கொள்ள விரும்புகின்றேன்.
குரு மஹராஜ் உங்களுக்கு புகழ்வதற்கு எழுத நினைத்தாலே ஒரு வகையான ஆனந்தமாக இருக்கிறது.
குருமஹராஜ் என்று சொன்னாலோ அல்லது பக்தர்களிடையே உங்களைப்பற்றி பேசினாலோ, எனக்கு ரொம்ப ஆத்ம திருப்தியாக இருக்கிறது. உற்சாகம் பக்தர் இடையே காணப்படுகின்றது. இதற்கு காரணம் உங்களுடைய சுத்த பக்தி, தெய்வீக குணம்தான் காரணம். கிருஷ்ணர் பகவத்கீதையில் என்னிடம் மனதை நிறுத்தி, என்னிடம் சரண் அடை என்று கூறுகிறார். சைதன்ய மஹாபிரபுவும் இதைப்போல் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை எல்லாருக்கும் விநியோகம் செய்தார். ஆனால் எந்த நியமம் இல்லாமல் மிக கருணையுடன் சைதன்ய மஹாபிரபு எல்லா மக்களுக்கும் சேர விரும்பினார். ஸ்ரீல பிரபுபாதர் புனித நாமத்தை பரப்பினார். குரு மஹராஜ் நீங்களும் இதனைத்தான் வெளிப்படுத்துகின்றீர்கள். குருமஹராஜ் சொன்னாலே நினைவிற்கு வருவது உங்களின் கருணை, சகிப்புத்தன்மை, உறுதி, மற்றவர்க்கு கிருஷ்ண உணர்வு கொடுக்கிறீர்கள். நீங்கள் எப்போதும் கிருஷ்ண உணர்வு எப்படி கொடுக்கவேண்டும் என்பதைப்பற்றியே நினைக்கிறீர்கள். கோவை இஸ்கானில் ராதா கிருஷ்ணர் புதிய கோவில் சீக்கிரமாக முடிந்து நீங்கள் குபோபிஷேகம் பண்ண வேண்டும் என்று விரும்புகின்றேன். குரு மஹராஜ் உங்களுடைய சிஷ்யன் என்பதில் நான் பெருமைப்படுகின்றேன்.
குரு மஹராஜ் ஜெய்!!! பிரபுபாதாகீ ஜெய்!!!
கெளராங்கா மஹாபிரபுகீ ஜெய்!!!!!!!
Kṛṣṇa dayā Sāgara dāsa
ISKCON Coimbatore