Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Subhāṅgī Yaśodā devī dāsī (Thuraiyur - India)

வணங்கத்தக்க என் ஆன்மீக குருவின் தாமரைப்பாதங்களில் என் பணிவான வணக்கங்களை மீண்டும் மீண்டும் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றேன். குருதேவா உம்முடைய கருணை இருந்தால் மட்டுமே நாங்கள் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற முடியும்.

குருதேவா ஈரேழு லோகங்களிலும் மாறி மாறி சுற்றியலைந்து கொண்டிருக்கும் இந்த வீழ்ந்த ஆத்மாக்களானது மிகவும் அரிதான நல்ல அதிர்ஷ்டத்தின் காரணமாக மனித பிறவி பெற்று உங்களை குருவாக அடைந்துள்ளது. இந்த மனித பிறவியில் கணக்கிலடங்காதவர்களில் மிக மிகச்சிலரே உங்களை குருவாக பெறும் நல்வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

வீழ்ந்த ஆத்மாக்களை கரையேற்றி கொண்டிருப்பவரான ஆன்மீக குருவிற்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.

எனது உடல், மனம் வாழ்வு ஆகியவற்றை குருவின் தாமரைத்திருவடிகளில் அர்ப்பணித்து எப்போதும் ஸ்ரீ பகவான் கிருஷ்ணரின் நாமத்தை ஜெபிக்கும் தகுதியை எங்களுக்கு அளிப்பீராக.

குருதேவா பகவான் கிருஷ்ணரின் காரணமற்ற கருணையை (கருணை) வெள்ளத்தை தன்னகத்தே கொண்ட திருவுருவமாக விளங்குபவர் தாங்கள்.

 வீழ்ந்த ஆத்மாக்களை கரையேற்றி கொண்டிருப்பவரான ஆன்மீக குருவிற்கு எனது பணிவான வணக்கங்கள் கோடி, கோடி….

இப்படிக்கு தங்கள் பணிவுள்ள சேவகி

சுபாங்கி யசோதா தேவி தாஸி

தங்கள் பணிவுள்ள சேவகன்

அத்வைத சீதாநாத் தாஸ்