என் அன்பிற்குரிய ஆன்மீக குருவே என்னோட குருமகராஜுக்கு எனது ஆத்மார்த்தமான சமர்ப்பணத்தை தங்களது தாமரைத்திருவடிகளில் கோடிக்கணக்கான முறைகள் சமர்ப்பிக்கின்றேன் குருதேவா…..
குருதேவா நீங்கள் வைஷ்ணவர் என்பதின் உண்மைப்பொருளான “பர துக்க துகீ” யாவீர்.
தாங்களே கருணைக்கடலாவீர் என்பதின் உண்மைப்பொருளாவீர்.
நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று என்னோட சிக்ஷா குரு அடிக்கடி கிளாஸ் எடுக்கும்போது கூறியிருக்கிறார்.
குருதேவா தங்களிடம் மட்டுமே கணக்கில் இடங்காத பக்தர்கள் அடைக்கலம் பெற்று அற்புதமான கிருஷ்ண உணர்வை தங்களிடமிருந்து பெற்றுள்ளனர்.
“குருதேவா” என்னோட சிக்ஷா குருவின் கருணையினால் குருமஹராஜ் உங்களோட கருணையினால் உங்களிடம் தீட்சை பெறும் நற்பாக்கியத்தை நான் பெற்றேன்.
பகவானோட கருணையினால்தான் குருகிடைப்பார் என்பார்கள், ஆனால் குருமகராஜ் உங்களிடம் அடைக்கலம் பெற்று, தீட்சைப் பெற்றதற்கு என்ன பாக்கியம் செய்தேனோ.
குருமகராஜ் உங்களின் கருணையினால் எனக்கு தினமும் கோவிலுக்கு சென்று பகவானுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைக்கனும். உங்களோட கருணையிருந்தால்தான் சேவை செய்யமுடியும் குருதேவா.
ஒவ்வொரு நிமிடமும் உங்களை நினைக்கும் பாக்கியத்தை தந்தருளுங்கள் குருதேவா.
இப்படிக்கு
தங்கள் பணிவுள்ள உங்கள்
கருணையை வேண்டி நிற்கும்
உங்கள் சேவகி
இந்திரசகி சேவிகா தேவி தாஸி
துறையூர்