குருமகராஜின் தாமரைப்பாதங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். மிகவும் கடைநிலையில் இருக்கும் என்னால் தங்களை போற்றி புகழ்வது எவ்வாறு? கருணையின் வடிவமாக இரக்கமே உருவானவராக விளங்கும் தாங்கள் இந்த ஜடவுலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை விடுவிப்பதற்காகவே புதிய சக்தியுடன் மீண்டும் வந்திருக்கிறீர்கள். தங்களின் புனித சேவை தொடரவேண்டும் என்பதே உங்கள் சீடர்களின் தொடர்ந்த பிரார்த்தனையாக இருக்கும்.
ஸ்ரீல பிரபுபாதரின் நம்பிக்கைக்குரிய உண்மையான சீடராகிய தாங்கள் ஸ்ரீல பிரபுபாதரின் ஆசியினால் எல்லா சூழ்நிலைகளிலும் பிரச்சாரம் செய்யமுடிகிறது. உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் தூய கிருஷ்ண உணர்வில் எல்லோரையும் உற்சாகத்துடன் வழிநடத்தும் மஹாபாகவதராக, உங்கள் சீடர்களின் உயிர்மூச்சாக போகின்ற இடமெல்லாம் அங்கிருப்பவர்களை கிருஷ்ண உணர்வில் கவர்ந்திழுக்கும் அற்புதமானவராக விளங்கும் தங்களின் தாமரைப்பாதங்களுக்கு மங்களமாக இந்த வியாசபூஜை நாளில் மீண்டும், மீண்டும் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள் குருமகராஜ்.
எனது குருமகராஜை பிரதிநிதிக்கும் சிக்ஷா குருவான H.G.ருக்மிஹா பிரபுவின் வழிநடத்துதலை ஏற்று எப்போதும் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கவேண்டும் என்று அவர் எங்களுக்கு கற்றுக்கொடுப்பதை கடைபிடிக்க முயற்சி செய்வதின் மூலமும், அவரது ஆசியினால் கிருஷ்ண உணர்வு சேவையின் மூலம் அவரை திருப்திபடுத்த முயற்சிப்பதே, எனது குரு மகராஜை திருப்திபடுத்தும் சேவையாக இருக்கும்.
எப்போதும் வைஷ்ணவர்களின் சேவையில் இருக்கவேண்டும் என்று குருமகராஜிடம் மிகவும் வேண்டி பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எல்லாப்புகழும் ஸ்ரீல பிரபுபாருக்கும் அன்புள்ள குருதேவருக்கும்.
Kavi Rūpā devī dāsī
Thuraiyur