ஹரேகிருஷ்ணா
2016 கோவை ரதயாத்திரையில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி குரு மகராஜரை மிக அருகில் சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவிற்கு ஆனந்தமாக இருந்தது. அது எனக்கு ஒரு இனிய ஆன்மீக அனுபவமாக இருந்தது. மேலும் நான் இவரிடமே தீட்சை பெற்று ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. மேலும் அவருடைய ஆயுளும், உடல்நலமும் முன்னேறி பல இடங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்வதையும், இன்னும் பல பேருக்கு தீட்சை அளித்து எல்லோருடைய ஆன்மீக வாழ்க்கையும் முன்னேறச்செய்ய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனிடமும், தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல பிரபுபாதரிடமும், எல்லா வைஷ்ணவர்களிடமும் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி, ஹரேகிருஷ்ணா.
K. Babaji