அன்பான என் ஆன்மீக தந்தை அவர்களின் தாமரைமலர் பாதங்களுக்கு, எனது பணிவான கோடி வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.
தயைகூர்ந்து எனது பணிவான வணக்கங்களை கருணையுடன் ஏற்பீராக! !
தங்களை போற்றி சொல்ல நாங்கள் தகுதியற்றவர்கள், இருப்பினும் தங்களது கருணையுடன் எங்களுக்கு ஓர் வாய்ப்பு கிடைக்கச் செய்த எங்கள் சிக்ஷா குருவிற்கு நன்றி கூறி வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்!!
தங்களை முதன்முதலில் ஸ்ரீரங்கத்தில் தரிசித்தோம். அதுவே எங்களின் மிகப்பெரிய பொக்கிஷமாகும்.
ஆன்மீக தந்தையே என் மகன் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும்போது, கோயம்புத்தூர் மகராஜ் கருணையினால் திடீரென்று தாங்கள் கருணை மழைபொழிந்து, என் மகனுக்கு ஸ்ரீ நரசிம்ம பிரார்த்தனை செய்து, அனுப்பி வைத்துள்ளீர்கள். தங்களது காரணமற்ற கருணையினால் இந்த இழப்பை ஒரு விழாவாக ஏற்றுக்கொண்டோம். அதன் பிறகே திருத்தாமரைப்பாதங்களை இறுக்கி பிடித்துக்கொண்டோம்.
இப்போது ஆன்மீக பயிற்சியில் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தங்களின் பெருமைகளை காணும்பொழுது “ஊமையும் கவி பாடத் தொடங்கி விடுவான். தங்களின் பாத கமலங்களே அடியேனுக்கு இருப்பிடமாகும். தங்களின் கருணை பார்வையே அற்ப ஆன்மாவிற்கு விடுதலை கொடுக்கும்.
உங்களது காரணமற்ற கருணையின் மூலமாக மட்டுமே நாங்கள் இத்தகைய அறியாமையின் கடலை கடந்து, தூய பக்தி சேவையில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ளமுடியும்.
உங்களது கருணையானது, வானம் போல எல்லையற்றதாகும். தாங்கள் நிதாய் கெளராங்காவின் கருணையை எடுத்து வந்து உலகம் முழுவதும் விநியோகித்து கொண்டுள்ளீர்கள். எங்களால் வேறு என்ன சொல்லமுடியும்?
பதித்த பாவன ஆன்மீக தந்தையே, தாங்கள் மிகவும் அற்புதமானவர். உங்களது சேவையில் மக்கள் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிக்கவே, நாங்கள் அனைவரும் முயற்சிக்கின்றோம்.
“எல்லாப்புகழும் தம்முடைய தாமரை திருப்பாதங்களுக்கே.”
இப்படிக்கு,
தங்களது அடைக்கலம் வேண்டி
யாசித்து, ஏங்கும், தவிக்கும்,
தங்களது இழிவடைந்த சேவகன்,
ராஜா தேவகி
சங்கீதா.