ஜெய் குருதேவா பதித்த பாவன குருதேவா ஆன்மீக தந்தையின் தாமரைப்பாதங்களுக்கு கோடானுகோடி வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.
பதித பாவன குருதேவ் கீ ஜெய் !
“ப்ரமாண்ட ப்ரமிஹிதே கோனே
பாக்யவான் ஜீவா
குரு க்ருஷ்ண பிரசாத பாய
பக்தி லதா பீஜா”
என்ற சைதன்ய சரிதாம்ருதத்தின் மேற்கோள்படி தவத்திருவாகிய தாங்கள் எனக்கு ஆன்மீக குருவாக கிடைத்தது எனது பாக்யம், ஈடு இணையற்ற வரம், என் மகளுக்கு சிக்ஷா குரு ருக்மிகா தாஸ் பிரபு அவர்கள் சொல்லி உங்கள் ஆசிர்வாதத்தால் திருமணம் முடிந்து உங்கள் நித்திய சேவகியாக இருக்கிறார்கள். அதுபோலவே என் மகனுக்கும் திருமணம் முடிந்தது இந்த புகழ் அனைத்துமே குருதேவருடைய ஆசிர்வாதம் அதனால் என் தவத்திரு குருதேவரின் தாமரைப்பாதங்களுக்கு கோடானு கோடி நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
இதுபோல் பல கட்டுண்ட ஆத்மாக்களை மாயை பிடியிலிருந்து விடுவித்து கெளர பிரேமையை அனைவருக்கும் வழங்க தாங்கள் நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழவும் எனது நெஞ்சார்ந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றேன்.
பகவான் ஸ்ரீ நரசிம்ஹ தேவரின் திருவடி தாமரை பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். பதீத பாவன ஸ்ரீல குரு மஹராஜ் கீ ஜெய் !
என்றென்றும் உங்கள் திருவடிகளை
தஞ்சமடைந்த சேவகி
தயாசிந்து ராதா தேவி தாஸி
ஹரிசங்கர்
பிரியங்கா
பிரசாந்த்