Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Paurṇamāsī Mamatā devī dāsī (Thuraiyur - India)

வணக்கம்

குருதேவா ஸ்ரீல பிரபுபாதா ஸ்ரீ ஸ்ரீ நிதாய் கெளராங்கா வேணுவன சந்திரா கோஸ்வாமிகள் ஆச்சார்யர்கள் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜர் அவர்களின் பொற்பாதங்களுக்கு பலகோடி வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன், குருவே கருணைக்கடலே குருவே எனது உயிர்மூச்சு பேச்சு அனைத்தும் என் குருவே குருவே எனக்கு மிகவும் பிடிக்கும் குருவின் கருணையினால்தான் நான் உயிரோடு இருக்கிறேன் குருவே எனக்க அனைத்தும் ஒரு முடவன் குருவின் கருணையினால் தான் மலை ஏறமுடியும் ஒரு ஊமை குருவின் கருணையினால்தான் கவிபாட முடியும், குரு எங்கிருந்தாலும் என்னை வழிநடத்துகிறார் இன்னும் பல கோடிபோர் என் குருவின் சீடர்களாகவும் சேவகர் சேவகிகள் ஆக வேண்டும் எனக்கு கிடைத்த அதே வாய்ப்பு அன்பு பாசம் கருணை நேசம் பல நண்பர்களுக்கும் சகோதர்களுக்கும் கிடைக்க வேண்டும் நான் என் குருவிற்கு பக்கத்தில் இருந்து இன்னும் நிறைய பக்தித்தொண்டு சேவைகள் செய்யவேண்டும் குருவின் கருணையிலே பக்தர்களை உருவாக்க வேண்டும் குரு தேவரின் வியாசபூஜை நன்னாளில் குருவின் தூய வைஷ்ணவ சேவகியாக இருக்கவேண்டும். மனம் புத்தி செயல் வார்த்தை அனைத்தும் குரு கிருஷ்ணரின் மேல் நிலைத்து இருக்கவேண்டும். குருவின் பொற்பாதங்களுக்கு பல கோடி நமஸ்காரங்கள்.

நமஸ்காரங்களை சமர்ப்பிக்கும்

பெளர்ணமாசி மம்தா தேவி தாஸி