ஹரே கிருஷ்ணா!
எல்லாப்புகழும் ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் ஸ்ரீல ஜயபதாகா ஸ்வாமி குருமஹாராஜர் அவர்களுக்கும் அனைத்து வைஷ்ணவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்களை உரித்தாக்குகின்றேன்.
குருமஹாராஜரின் வியாச பூஜை தினமான இன்று அவருடைய புகழை எடுத்துரைக்க எமக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஆனால் அவர் எனது ஆன்மீகத் தந்தை என்ற முறையில் அவரிடம் எனக்கு கிடைத்த அனுபத்தை பகிர்கின்றேன்.
ஒரு மழலையின் பேச்சினை அனைவராலும் புரிந்து கொள்ள இயலாது. ஆனால் அதன் தாய் தந்தையைத் தவிர மற்றவர்கள் புரிந்து அக்குழந்தைக்கு வேண்டியதை செய்வது கடினமாகும். ஏனெனில் அக்குழந்தை மீது அதீத அன்பை செலுத்தி பாதுகாப்பர். அதுபோலவே குருதேவரும், எனது துக்கங்களையும், எனது தேவையையும், எவ்வாறு கிருஷ்ண பக்தி சேவையில் இருந்து பயிற்சி செய்வது என்பதனை அவரே தெளிவாக வழிகாட்டியாய் விளங்குகிறார்.
அது எப்படியெனில்,
ஒருவன் குழப்பத்தில் உள்ள போது நண்பனாகவும், கஷ்டத்தில் உள்ளபோது தாயாகவும், தவறு செய்தபோது மன்னிப்பதில் தந்தையாகவும், வழியறியாப் படகாய் நின்ற போது கலங்கரை விளக்காகவும்.
மொத்தத்தில் நித்யானந்தரின் மொத்த கருணா மூர்த்தியாய் இருக்கின்றார்.
பூக்களில் சேராத பூவொன்று!
புவியில் பூத்தநாள் இன்று!!
விண்ணுலகம் சேராத நிலவொன்று!
மண்ணுலகம் உதித்த நாள் இன்று!!
என்னில் உதித்த வார்த்தைகளாய்,
பொன்னில் மிளிரும் ஒளியாய்,
கண்ணில் இருக்கும் கருவிழிபோல்
மாயையிலிருந்து எங்களை காக்கும்,
கௌரநித்தாயின் கருணை வடிவே!
மடியும் நிலை வந்தாலும்,
உங்களை மறவா நிலை வேண்டும்
ஐயனே,
உங்களது சேவையில் நிழல்போல்
தொடர உங்களது ஆசியை
எதிர்பாத்து காத்திருக்கும்...
உங்களின் கடைத்தேரா சேவகன்,
சர்வ மங்கள கிருஷ்ண நாம தாஸன்