Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Devi (Bangalore - New Rajapur Dham - India)

ஹரே கிருஷ்ணா குரு மஹராஜ் ,

வணக்கம். உங்களை பார்க்க வேண்டும்.உங்கள் 51வது வியாச பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். உங்களிடம் தீட்சை பெற வேண்டும் என்று எனக்கு மிகவும் விருப்பம் குரு மஹராஜ். உங்கள் கருணையால் இதை எல்லாம் செய்து தாருங்கள்.

நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? எங்கள் மீது கருணை கொண்டு உங்கள் உடல் நலத்தை கிருஷ்ணர் நல்லபடியாக வைத்து கொள்ளட்டும் குரு மஹராஜ்.

நான் தேவி , என் மகன் குரு  சரண் உடன் வாழ்ந்து வருகிறேன். நான் உங்கள் முன்பு ஜெப மாலையை வைத்து தினமும் 16 மாலை நாம ஜபம் செய்ய வைத்து விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்திலிருந்து 16 மாலை தடையின்றி அதிகாலையில் செய்ய கருணை புரிந்துள்ளீர்கள்.

3 மாதங்களுக்கு முன்பு எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு அதிக காயம் ஏற்பட்டது. நரசிம்மரின் கருணையால் வெளிவந்து கொண்டு வருகிறேன்.

இந்த நிகழ்வுக்கு பிறகு பக்தி விருக்ஷ வகுப்பில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்துள்ளது. நிறைய தெளிவு கிடைப்பது போல உள்ளது. பக்தி யோகம் பயிற்சி செய்ய தங்கள் கருணை வேண்டும் குரு மஹராஜ்

இன்று திரும்ப எனக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு நிலையிலும் கிருஷ்ண உணர்வை பின்பற்ற நீங்களே எங்களின்  வழிகாட்டி. எந்த நிலையிலும் கிருஷ்ண உணர்வை பின் தொடர்ந்து நிலைத்து நிற்க குரு மஹராஜ் உங்கள் கருணை எங்கள் மீது வேண்டும்.

எனது மகன் குரு சரண் பலருக்கு கிருஷ்ண உணர்வை பரப்ப பிரச்சாரம் செய்து பக்தியில் நிலைத்து நிற்க வேண்டும் என்பது உங்கள் கருணையால் நடக்க வேண்டும்.ஆசீர்வாதம் செய்யுங்கள் குரு மஹராஜ்.

உங்கள் வியாச பூஜையில் கலந்து கொண்டு உங்களிடம் தீட்சை பெற வேண்டும் என்று மிகவும் விருப்பம் குரு  மஹராஜ். ஆனால் வர முடியுமா? தெரியவில்லை. ஆனாலும் வர வேண்டி டிக்கட் புக் செய்துவிட்டு பொறுப்பையும் உங்களிடம் விட்டுவிட்டேன். நான் வந்து பங்கு பெற எனக்கு எல்லா சூழல்களையும் சாதகமாக செய்து தாருங்கள் என்று உங்களிடம் கேட்டிருந்தேன். அதற்கான அறிகுறிகளை இப்போது நான் உணர்கிறேன்.வீழ்ந்தப்பட்ட ஆத்மா நான் , தயவு கூர்ந்து என்னை கிருஷ்ணரின் பாதத்திற்கு  அழைத்து செல்லுங்கள்.

கிருஷ்ண உணர்வை பரப்ப ஞானத்தை அருளுங்கள்.அனைத்து ஞானத்தையும் சரிவர மற்ற  ஆத்மாக்களுக்கு கொண்டு செல்ல துணை புரியுங்கள் குரு மஹாராஜ் . எங்களின் ஒளி விளக்கு நீங்கள் தான்.

குரு மஹாராஜ் குரு சரணுடன் கௌர நித்தாய் என மூன்று குழந்தைகள் வீட்டில் உள்ளனர். நாங்கள் தனியாக இல்லை கௌர நித்தாயுடன் நீங்கள் 4 பேர் என்று சேவானந்தி மாதாஜியும் கௌரங்க பிரசாத் பிரபுவும் அவர்கள் இருவரையும் எங்கள் வீட்டில் விட்டு சென்றனர்.

உங்கள் கருணையால் தினமும், மங்கள் ஆரத்தி , துளசி, நரசிம்ம ஆரத்தி நாம ஜபம், பகவத் கீதை, பாகவதம் என்று பக்தியால் ஒவ்வொரு நொடியும் பக்தியால் நிறைந்து உள்ளது போல் உணர்கிறோம் குரு மஹாராஜ் .

நாங்கள் ஜடப் பற்றுதலால் எந்த நிலையிலும் பக்தியில் இருந்து விலகாமல் உங்கள் கருணையால் கிருஷ்ண உணர்வில் வலுவுடன் நிற்க வேண்டும்.

குரு மஹாராஜ் கி ஜெய் !

தங்கள் கருணையை வேண்டி நிற்கும்

தேவி

8681918243