ஹரே கிருஷ்ணா குருமஹாராஜ்
எனது பணிவான வணக்கங்களை உங்கள் தாமரைப் பாதங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
நான் உங்கள் மகள் செளம்யா சரஸ்வதி தேவி தாசி, எனது கணவர் கோவிந்தராஜ், மகன் ஷ்யாம் (குருமகராஜ் வழங்கிய பெயர்). நான் இஸ்கான் பலராமதேசில் உங்களிடம் தீட்சை பெற்றேன். இப்போது நானும் என் மகனும் இலங்கையில் இருக்கிறோம். எனது கணவர் கிருஷ்ணா கதா தேசில் பணி புரிகிறார். அவர் உங்களிடம் தீட்சை பெறும் ஆர்வத்தில் உள்ளார்.
நாம் முதல் முதல் குருமகராஜ் உங்களை இஸ்கான் பலராமதேஷ் - பஹ்ரைனில் (காணு கார்டன் இஸ்கான் ஆலயத்தில்) பார்த்தோம். குருமகராஜ் உங்களை பார்த்ததிற்கு பின்னரே எங்களுக்கு கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வருவதற்கு ஆசை வந்தது. எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது அந்த முதல் தடவை பார்த்தது, குருமஹாராஜ் வந்திருக்கும் போது அதிகமான பக்தர்கள் அங்கு கூடியிருந்தார்கள். எனது மகன் அப்போது சிறியவர், அவர் அழுதார், அப்போது நான் மகனை தூக்கிக்கொண்டு வெளியே வரும் போது குருமகராஜ் எங்களை பார்த்துக்கொண்டே இருந்தீர்கள். எனது மகனின் (அப்போது பெயர் ஷகித்) அழுகை சத்தம் கேட்டு எங்களை குருமகராஜ் பார்த்துக்கொண்டே இருந்தீர்கள். அப்போது குருமஹாராஜ் பார்த்த அந்த பார்வையாலேயே தான், நான் நினைக்கிறேன், நமக்கு இந்த கிருஷ்ண பக்திக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அடுத்த தடவை குருமஹாராஜ் வரும் பொழுது நாம் குறைந்த பட்சம் அஸ்பிரண்ட் குருமகராஜிடம் எடுக்க வேண்டும் என்று அப்போது நாம் கூறினோம். ஆனால் குருமஹாராஜின் கருணையால், அடுத்த முறை குருமஹாராஜ் வந்த போது எமக்கு குருஆஷ்ரயாவே கொடுத்தீர்கள். உண்மையில் நாம் குருமகராஜிற்கு நன்றி கூற வேண்டும், ஏனென்றால் குருமகராஜை நாம் காணாதிருந்தால் நாம் இன்னமும் அதே நிலையில் இருந்திருப்போம், மேலும் கிருஷ்ண பக்தியைப் பற்றியோ அல்லது கிருஷ்ண உணர்வைப் பற்றியோ அல்லது பகவானைப் பற்றியோ நமக்கு எதுவுமே தெரிந்திருக்காது. எனவே இது குருமகராஜின் கருணையால் மட்டுமே நிகழ்ந்தது. குருமகராஜ் உங்கள் கருணை எப்போதும் எங்களுக்கு வேண்டும். குருமகராஜ் உங்களை நாம் பார்க்க வேண்டும். சீக்கிரமாகவே பார்க்க வேண்டும், அதுதான் எங்கள் ஆசை. எங்களுக்கு மட்டுமல்ல, எல்லா பக்தர்களுக்கும் குருமகராஜரின் கருணை கிடைக்கவேண்டும். அதைத்தான் குருமஹாராஜிடம் நாம் வேண்டிக்கொள்கிறோம்.
ஹரே கிருஷ்ணா, ஹரி போல்
உங்கள் அன்பு மகள்
செளம்யா சரஸ்வதி தேவி தாசி
இஸ்கான் கொழும்பு, இலங்கை