எங்கள் அன்பு தந்தையின் பொற்பாதங்களுக்கு கோடி வந்தனங்கள்.
உங்கள் ஆசியை ஒவ்வொரு கணமும் வேண்டி நிற்கும் இந்த அடியவர்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் குருமஹராஜ்.
இன்றைய தினம் (மார்ச் 14, 2022 முதல்) தாங்கள் எங்களோடு துபாயில் இருப்பது அனைவருக்கும் சொல்லில் அடங்கா ஆனந்தத்தை அளிக்கிறது.
எத்தனை பிறவிகள் தாண்டி உங்களை காண்கின்ற பாக்கியம் இப்பிறவியில் கிட்டியது என்று எண்ணி பார்க்கிறேன்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசிப்பதற்கு ஈடான ஒன்று இந்த சம்பந்தம். குருதேவா உங்கள் தரிசனம் தந்த பொலிவு, பிறவிப்பயன்-உங்கள் கருணை மட்டுமே, எங்கள் குருதேவா.
முக்குணங்களில் பொதிந்து கிடந்த ஜடமான உணர்வுகளுக்கு கிருஷ்ணபக்தியெனும் உயர்ந்த உணர்வை, உயிராக அளித்தருளியதால் வந்த பொலிவு.
‘‘கண்டேன் சீதையை’’ என்று பக்த ஹனுமான் உற்சாக பெருக்கால் துள்ளி குதித்ததைபோல், ஆன்மா இத்தனை பிறவிகள் தாண்டி’’கண்டேன் என் குருவை’’ என்று கண்ணீரில் நெகிழ்கிறது. பாதையை தொலைத்து தாயை பிரிந்த குழந்தையைப்போல தவித்து நின்ற ஜீவனுக்கு புத்துயிர் கொடுத்தது உங்கள் சம்பந்தம். உங்கள் பொற்பாத சேவை ஒன்றே எங்கள் அக்ஞான இருளை போக்கவல்ல ஒரே வழி.
காத்தருள்வீர் எங்கள் தந்தையே.
உங்கள் அன்பு மகள்,
லலிதா பக்திமதி தேவி தாசி
Lalitā Bhaktimatī devī dāsī (dīkṣa)
Dāmodara deśa