Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Advaita Sītānātha Dāsa (Chennai - India)

நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்டாய பூ-தலே
ஸ்ரீமதே ஜெயபதாகா-ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய்-க்ருப-ப்ரதாயினே
கௌர-கத தாமதாய நகர-க்ராம தாரிணே

அன்பின் இருப்பிடமே அர நொடியில் பிறப்பிடமே கருணை வடிவே மாசற்ற தியாக உள்ளம் கொண்ட எனது குருவே உங்கள் பொற்பாதம் பணிகிறேன்.

அன்றும் இன்றும் என்றும் ஓயாது எங்களை ஆட்கொள்ளும் எங்கள் குருவே உங்கள் திருவடி சரணம்.

தங்கள் குருவின் கட்;டளைப்படி கோடானுகோடி பக்தர்களை உருவாக்கி பகவானின் பக்தி சேவையில் ஆட்கொள்கின்றீர்கள். அந்த பக்தரில் நானும் உங்கள் சேவகன் என்று மகிழ்ச்சி அடைகிறேன்.

பக்தருக்கு பக்தியுடன் நற்பண்பும் பக்குவமும் அளிப்பவரே பக்தியின் பழச்சுவையினை பக்தர்களுக்கு பகிர்ந்தளிப்பவரே. தம் பாத தூசியால் எம்மையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

துயரக்கடலில் துடிதுடித்துக்கொண்டிருப்போருக்கு தூணாக அமைந்து துயர் துடைக்க அவதரித்த தூயவரே, தூங்கிக் கிடந்தது போதுமென்று தூயவனுக்கான வழியை காட்டுபவரே. தூணிலும் துரும்பிலும் இருப்பவரான துளசிப்பிரியரை துல்லியமாக உணர்ந்தவரே, தம் தொண்டரின் துன்பத்தினை துரத்திடும் தாயன்பு கொண்டவரே, துன்பத்தினை தூசு போல ஏற்று பக்தியின் ஆழத்தினை பக்குவமாய் காட்டிய பிரபிரம்மனே தம் பாதத்தினை சரணடைகிறேன்.

ஜெகநாதரின் பக்தரான தாம் ‘ஜெயபதாக ஸ்வாமி” என்னும் திருநாமம் கொண்டு சகல ஜனங்களுக்கும் பக்தி என்னும் அமிர்தத்தினை பகிர்ந்தளித்து, பகவானின் பாதத்தில் பாவப்பட்ட ஆத்மாக்களினையும் கொண்டு செல்பவரே நகர கிராமங்கள் தோறும் ஹரியின் நாமத்தினை பரப்பிவரும் எம் ‘குருதேவா” தமக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

எங்கள் குருமஹாராஜர் ‘ஜெயபதாக ஸ்வாமி” தங்கள் பொற்தாமரை பாதம் பணிகிறேன்.

அத்வைத சீதாநாத் தாஸன், துறையூர்

Advaita Sītānātha Dāsa (Dīkṣā),
Thuraiyur, India