என்னுயிர் ஆன்மீக குருவே, தாங்களே கருணைக்கடலாவீர் தாங்கள் வைஷ்ணவர் என்பதின் உண்மைப்பொருளான ‘பர துக்க துகீ” யாவீர்.
இவ்வாறு கருணையே வடிவான நித்தியானந்தரின் ரூபத்தையே தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜர் அவர்களுக்குள் காண்கின்றேன். இதன் காரணமாகவே அவரிடமே தீட்சையினை பெறவும் அவரின் சீடராக இருப்பதிலும் நான் பெருமை கொள்கிறேன்.
முதன்முதலில் ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமி குருமஹாராஜர் அவர்களை ஸ்ரீரங்கத்தில் ரத யாத்திரையில் தங்களை தரிசனம் செய்தேன் அப்பொழுதே தங்களின் ஆசிர்வாதம் மற்றும் கருணையும் பெற்றேன்.
அன்றுமுதல் தங்களையே ஆன்மீக குருவாக இப்பிறவியிலும் இனிவரும் பிறவியிலும் ஏற்பேன் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். அன்று முதல் தாங்கள் தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் தங்களுக்கான சேவையை செய்து தூய்மைப்படுத்திக்கொண்டேன்.
மேலும் குரு சீடர் எனும் நித்திய பந்தத்தினை மேன்மேலும் வளர்த்துக்கொண்டேயிருக்கவே விரும்புகின்றேன். அதற்கான வழிமுறைகளாக எனது சிக்ஷா குருவான பக்த திரு ருக்மிஹா பிரபு எனக்கு அளிக்கும் வழிநடத்தல்களையும் நான் நிச்சயமாக கடைபிடிப்பேன்.
எனது சேவையில் நான் புரிந்துள்ள அபராதங்களுக்கு நான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு வேண்டுகிறேன். உங்களுடைய கருணையின் அடைக்கலத்திலேயே நான் இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றேன்.
தங்களின் சேவையை யாசிக்கும் யாசகன்
ஆதி புருஷ நித்தாய் தாஸன், துறையூர்
Ādi Puruṣa Nitāi Dāsa (dīkṣā),
Thuraiyur, India