ஜெய் குருதேவ்
என் உயிர் குருதேவா தங்களை போற்றுவதற்கு வாய்ப்பினை அளித்ததற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். முதன்முதலில் ஸ்ரீ ரங்கத்தில் தங்களை தரிசனம் செய்தேன். தங்களின் ஆசிர்வாதம் மூலமாகவும் அதிக உற்சாகத்தின் மூலமாகவும் நிறைய கிருஷ்ண பக்தி பயிற்சி செய்ய தொடங்கினேன். தாங்களே மூல காரணமும் மற்றும் ஆன்மீக குருவும் ஆவீர். தங்களிடம் தீட்சை வாங்குதவற்கு தகுதி இல்லை. தங்களின் கருணையினால் மட்டுமே சாத்தியமாகும். கருணைக்கடலாவீர். ‘பர துக்க துகீ” யாவீர். இவ்வாறு கருணையே வடிவான நித்தியானந்தரின் ரூபமான தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜர் குருதேவா தங்களின் சீடராக இருப்பதிலும் நான் மிக மிக பெருமை கொள்கிறேன்.
ஆன்மீக வழிமுறையை மேன்மேலும் வளர்த்துக்கொண்டிருக்கிறேன். அதற்கான வழிமுறைகளாக எனது சிக்ஷா குருவான பக்த திரு ருக்மிஹா பிரபு எனக்கு அளிக்கும் வழிநடத்தல்களையும் நான் நிச்சயமாக நான் கடைபிடிப்பேன்.
ஆன்மீக குருவாக இப்பிறவியிலும் இனிவரும் பிறவியிலும் ஏற்பேன் என்று உறுதி எடுத்து கொண்டேன். அன்று முதல் தாங்கள் தமிழகத்திற்கு எங்கு வந்தாலும் தங்களுக்காக சேவையை செய்து தூய்மைபடுத்தி கொண்டேன்.
பதீத்த பாவன குருதேவா தாங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று துளசி மகராணியிடம் பிரார்;த்தனை செய்து வருகிறேன்.
ஜெய் குருதேவா! ஜெய் குருதேவா! ஜெய் குருதேவா!
இப்படிக்கு,
தங்கள் சேவையை யாசிக்கும்,
தயாசிந்து ராதா தேவி தாஸி, துறையூர்
Dayasindhu Rādhā Devī Dāsī (dīkṣā),
Thuraiyur, India