ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே பக்தி வேதாந்த ஸ்வாமின் இதி நாமினே
நமஸ்தே ஸரஸ்வதி தேவே கௌரவாணி ப்ரசாரிணே
நிர்விஷேஷ ஷூன்யவாதி பாஸ்சத்ய தேசதாரிணே
நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்டாய பூ-தலே
ஸ்ரீமதே ஜெயபதாகா-ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய்-க்ருப-ப்ரதாயினே
கௌர-கத தாமதாய நகர-க்ராம தாரிணே
தெய்வத்திரு ஸ்ரீல ஜெயபதாக ஸ்வாமி க்கு
தங்கள் திருவடியில் தஞ்சமடைந்த தங்களால்
தீட்சை கெற்ற பக்தன் சமர்ப்பிக்கும்
சிறு பிரார்த்தனை!
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்க
தலைவர் தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த
ஸ்வாமி பிரபுபாதாவினால் ஸ்ரீ கிருஷ்ணரின்
வெற்றி கொடியாக திகழ்வாய் என
ஆசிர்வாதம் பெற்ற எங்கள் குருவே!
குருவின் ஆசிகளோடு ஸ்ரீ கிருஷ்ணரின்
சங்கல்பத்தின் படி எங்களுக்கு கிருஷ்ண
பக்தியை வெளி நாட்டிலிருந்து
இந்திய மகா தேசத்திற்கு அனுப்பப்பட்ட
மா மனிதரே எங்கள் குருவே!
குருவின் கட்டளையை ஸ்ரீ கிருஷ்ணரின்
கட்டளை என கொண்டு வாழ்வை
அர்ப்பணித்த எங்கள் குருவே!
தங்களது அளப்பற்ற சேவையை
போற்றி முற்பிறவியில் இந்தியாவில்
மகாபிரபு சைதன்யரின் சீடராக
ஸ்ரீ நித்யானந்த பிரபுவின்
அனுக்கிரஹம் பெற்ற ஸ்ரீல பிரபுபாதாவினால்
புகழாரம் பெற்ற எங்கள் குருவே!
மகாபிரபு சைதன்யரின் வங்காள
போதனைகளை ஏற்று இந்திய மற்றும்
வெளிநாட்டு மொழிகளை கற்று
இந்திய பூமியை தாய் வீடாக
ஏற்று சேவை செய்யும்
எங்கள் குருவே!
பூலோக வைகுண்டம் என
போற்றப்படும் ஸ்ரீ ரங்கத்தில்
திருச்சி மாவட்ட ஸ்ரீ கிருஷ்ண
பக்தர்களின் நீண்ட நாள்
கனவை நினைவாக்கி ஸ்ரீ சைதன்யரின்
( ஸ்ரீ கிருஷ்ணரின்) காலடிபட்ட
ஓர் இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணருக்காக
கோவில்கட்ட நிலத்தை பெற்றுத்தந்த
எங்கள் குருவே!
இந்த தென்னிந்திய புனித பூமியில்
கோவில் கட்ட முக்கிய கிருஷ்ண
பக்தர்கள் அனுப்பி எல்லா
வித உதவியும் செய்துவரும்
எங்கள் குருவே!
ஸ்ரீல பிரபுபாதவின் விருப்பப்படி
ஸ்ரீ சைதன்ய மகாபிரபு அவதரித்த
மாயாபுரில் மிக பிரமாண்ட
அளவில் உலகத்திற்கே ஸ்ரீ கிருஷ்ண
பக்தியை மூழ்கடிக்க அல்லும் பகலும்
உடல் உழைப்பை தந்து தங்கள்
உடல் நலனை சிறிதும் பாராமல்
உழைத்துவரும் எங்கள் குருவே!
எங்கள் வாழ்வில் ஸ்ரீ கிருஷ்ண
உணர்வை தங்களின் ஆசிர்வாதத்தால்
அளித்துவரும் எங்கள் குருவே!
பிரச்சாரமே சாரம் என வாழ்வில்
உறுதி பூண்டு நாடு முழுவதும்
உலகம் முழுவதும் பயணம் சென்று
வீடு வீடாக சென்று கிருஷ்ண
உணர்வுகொள் என பிரச்சாரம்
செய்து இன்று ஸ்ரீ நித்தியானந்த
பிபுவின் பிரேம அவதாரம்
எங்கள் குருவே!
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும்
ஸ்ரீ நித்யானந்த பிரபுவின்
லீலைகள் போல, ஜகாய், மதாய்
போன்ற பாவிகளை விடுதலை செய்தது
போல உலகம் பூராவும், காமம்
போதை மற்றும் நான்கு விதமான
பாவங்களை செய்துவரும் மனிதர்களை
ஸ்ரீகிருஷ்ணரின் அன்புதொண்டில்
இணைத்து ஹரே கிருஷ்ண
மகாமந்திரத்தை பிரச்சாரம்
செய்யும் எங்கள் குருவே!
எனது வாழ்வில் ஸ்ரீ கிருஷ்ண
உணர்வை தங்களின் ஆசிர்வாதத்தால்
பெற்ற பக்தன் என்ற முறையில்
தாங்கள் எல்லா உடல்நலமும்
பெற்று நீண்ட நாள் வாழ்ந்து
உங்கள் பிரார்த்தனையில் நானும்
பங்குபெற்று உங்களுக்காக தினம்
தினம் பிரார்த்தனை செய்யும்
உங்கள் பக்தன், தங்கள் பாதம் பணிந்து
வேண்டிக்கொள்கிறேன்.
நமோ நரசிம்ஹ தாஸன், ஸ்ரீரங்கம்
Namo Narasimha Dasa(Diksa),
SriRangam, India