நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்டாய பூ-தலே
ஸ்ரீமதே ஜெயபதாகா-ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய்-க்ருப-ப்ரதாயினே
கௌர-கத தாமதாய நகர-க்ராம தாரிணே
பிரியமான தவத்திரு குருமஹாராஜர்,
தங்களின் புனிதமான அவதாரமாகிய இந்நாளில் தங்களுக்கு இந்நாளில் நான் பணிவான வணக்கங்களை தங்களின் தாமரைப்பாதங்களில் ஸமர்ப்பிக்கின்றேன். தங்களின் தாமரைப்பாதத்துக்கு தண்டவாத் பிரணாம் எல்லாப்புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே.
தங்களின் அயராத சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் புகழை ஓரிரு வார்த்தைகளில் கூறிவிட முடியாது. தங்களின் திடஉறுதி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கருணையான அன்பு, அக்கறை கொள்தல், மனதால்கூட யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத பால்போன்ற வெண்மையான குணம், இன்றும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். தங்களுடன் நேரில் அதிகம் நட்பு இல்லை.
மிக ஆச்சர்யமாக உள்ளது. தாங்கள் உடல் அல்ல ஆத்மா என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கின்றீர்கள். தங்களுடன் அருகில் இருந்து சேவைசெய்யும் பக்தர்கள் மிக பாக்கியசாலிகள். தங்களால் எத்தனை ஆத்மாக்கள் தங்களின் ஆன்மீக பாதையை தொடர்பவர்களாக இருக்கிறார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் இடைவிடாது தொடரும் தங்களது பிரச்சார சேவை வேறு எவராலும் சாதிக்க முடியாது. சொல்வதைவிட செயல்புரிவது மிக உன்னதமானது. தங்களின் கனிவு, கருணை, தீட்சையான பார்வை, ஒரு முடவனை கூட நடக்கவைத்து பக்தித்தொண்டில் சிறப்பாக முன்னேற முடியும். தங்களின் தாமரைப்பாதங்களில் பலசமயம் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவி கோரினால் உண்மையில் உடனே வழிநடத்துகிறீர்கள். தங்களின் கருணையே கருணை.
தாங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம் மிக புனிதமானதாகி அங்குள்ள அனைவரையும் பக்தர்களாக மாற்றுகிறீர்கள்.
இந்தப்பிறவியிலல் தங்களை ஆன்மீக குருவாக அடைக்கலம் பெற்றமைக்கு தங்களுடன் சங்கம் கொண்டதற்கு மிக பாக்கியசாலியாக நினைக்கிறேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் சக்தி அளிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதில் துளிகூட சந்தேகமில்லை. மிகப்புனிதமான இந்நாளில் எனது சேவையில் புரிந்துள்ள அபராதங்களுக்கு நான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். நான் எப்பொழுதம் உங்களுடைய உபதேசங்களை பின்பற்றுவதாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். எப்பொழுதும் உங்களின் கருணையையே வேண்டுகிறேன்.
தங்களால் இந்த உலகில் உள்ள மனித சமூகம் முழுமைக்கும் நன்மை பயக்கும். எத்தனையோ ஆத்மாக்கள் தங்களால் வழிநடத்தி செல்லவேண்டும். தயைகூர்ந்து இந்த உலகைவிட்டு சென்றுவிடாதீர்கள். நீங்கள் இங்கு இருக்கவேண்டியது மிகமிக அவசியமாகும் எங்கள் அனைவருக்கும்.
தங்களுடைய புகழ் மூவுலகங்களிலும் பரவுவதாக, தங்களின் இப்புனித நன்னாளில் நீடூழி வாழ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப்பாதங்களில் மற்றும் ஸ்ரீல பிரபுபாதரிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
ஹரே கிருஷ்ணா.
தங்களின் பணிவான சேவகி,
நித்திய யோகினி விஷ்ணுப்ரியா தேவி தாஸி, துறையூர்.
Nitya Yogini viṣṇupriya Devī Dāsī (Diksa),
Thuraiyur, India