ஸ்ரீ ஸ்ரீ நிதாய் வேணுவன சந்திரா, ஸ்ரீல பிரபுபாதா, சிக்ஷா குரு, தீட்சை குரு, மற்றும் அகில உலக இஸ்கான் பக்தர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவிக்கிறேன். எனது தீட்சை குருவின் வியாச பூஜை நன்னாளில் எனக்கு போற்றுதற்குரிய எந்த தகுதியுமே இல்லை. ஆனால் சீடர் குருவை போற்றவேண்டும் சாஸ்திரத்தில் இருக்கிறது நான் போற்றி புகழ்கிறேன். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பினை கொடுத்த வைஷ்ணவ பக்தர்களுக்கு உள்ளமார்ந்த நன்றியினை தெரிவிக்கிறேன். எனது தீட்சை குருவின் வியாச பூஜை நன் நாளுக்கு மீண்டும் நன்றி. சூரியனை போன்றவர் ஒளி விளக்கு அவர் பல்லாண்டு பல்லாண்டு நீர் வாழ்ந்திடவே நாங்கள் பற்களில் வைக்கோலிட்டு பரந்தாமனை வேண்டி நிற்கிறோம்.
ஓ ஆன்மீக வெற்றிக்கொடியே வாழ்க நீர் பல்லாண்டு,
ஓ தெய்வீக தவ புதல்வரே வாழ்க நீர் பல்லாண்டு,
ஓ ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜர் வாழ்க நீர் பல்லாண்டு.
எனது குரு ஆனவர் ஒரு தாய் தன் குழந்தையை பார்ப்பது போல் எனது குரு ஆனவர் அனைவரையும் அன்புடனும் பாசத்துடனும் கட்டி காத்து அரவணைக்கிறார். கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிக்கும் விடிவெள்ளியாக எந்த நேரமும் துடித்துக்கொண்டு இருக்கிறார். எப்படியோ இருந்த என் வாழ்க்கையில், இருள் சூழ்ந்த என் வாழ்க்கையில் தீப சுடரை ஏற்றிவைத்து சூரியனை போல் ஒளி பிரகாசமாக மாற்றிவிட்ட என் குரு, கிருஷ்ணருடைய வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது இதயம் கசிந்த உள்ளம் உருகிய கோடானு கோடி நன்றியினை என் குருவின் தாமரை பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
‘ஓம் அஞ்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா சக்ஷூர் உன்மீலிதம் யே தஸ்மை ஸ்ரீ குருவே நம:”
நான் இருள் மிகுந்த அறியாமையில் பிறந்துள்ளேன். என் குருநாதர் அறிவு எனும் ஒளியால் என் கண்களை திறந்தார் அவருக்கு நான் பணிவான வணக்கங்களை அர்ப்பணிக்கின்றேன்.
குரு என்பவர் உண்மையில் பகவத்ஸ்வரூபமாக ஆராதிக்கப்பட வேண்டியவர். ஏனென்றால் அவர் பகவானுடைய அந்தரங்க தாஸன் என்பதை சாஸ்திரங்களும் எல்லா ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக்கொள்கிறார்கள். அப்பேர்பட்ட ஆன்மீக குருவின் தாமரைப்பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
யஸ்ய ப்ரஸாதாத் பகவத் ப்ரஸாதோ குருநாதரின் கருணையால் கிருஷ்ணரின் அருள் கிட்டுகிறது. இப்படியாக அதிகாரப்பூர்வமான குருவிடம் சரணடையும் போது கடவுள் நம்மை ஏற்றுக்கொள்கிறார். தம்முடைய குருவின் வார்த்தையை தன் உயிர் மூச்சாகவும் பேச்சாகவும் ஏற்று வாழ்கின்றார். ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜருக்கு ஜெய், ஸ்ரீல பிரபுபாதருக்கு ஜெய், வாழ்க வாழ்க வாழ்க, உள்ளமார்ந்த நன்றி நன்றி நன்றியினை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளும் சேவகி,
பெளர்ணமாசி மம்தா மாயி தேவி தாசி, துறையூர்
Paurnāmasi Mamata Mayi Devī Dāsī (Diksa),
Thuraiyur, India