என்னுடைய அன்பும் பாசத்திற்கும் உரிய குருமஹாராஜர் அவர்களுக்கு,
என்னுடைய இதயம் கலந்த வணக்கங்களையும் நன்றிகளையும் தங்களுடைய தாமரைப்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். இந்த பொன்னான திருநாளில் எந்தவித உபயோகமும் இல்லாமல் மிருகமாக வாழ்ந்துகொண்டு இருந்த எனக்கு தங்களுடைய தாமரைப்பாதங்களில் அடைக்கலம் கொடுத்தமைக்கு கோடானு கோடி வணக்கங்கள் அளித்தாலும் முழுமை பெறாது. என்னுடைய ஆன்மீக பக்தி வாழ்வில் முதலாவதாக ஸ்ரீல பிரபுபாதரும், 2007 ஆம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி முதன்முதலாக இஸ்கானில் தங்களையும் சந்தித்தேன். அன்று முதல் இன்று வரை தங்களுடைய காரணமற்ற கருணையின் மூலம் என்னுடைய பக்தி சேவை தொடர்ந்து கொண்டுள்ளது. ‘வந்தேகம் ஜகத் குரோ” முழு அண்டத்திற்கும் குரு ஸ்ரீ கிருஷ்ணரே. எல்லா ஜீவராசிகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதற்காக கருணைவாய்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய குணங்களை ஒவ்வொரு நபரின் மூலம் வெளிப்படுத்துகிறார். இதில் கருணை, தாராளமனப்பான்மை, சாந்தம், பொறுமை, உறுதி மேலும் பல தெய்வீக குணங்களை பெற்ற தங்களை என்னுடைய வாழ்வில் குருவாக பெற்றமைக்கு என்னுடைய அன்பும் பாசமும் கலந்த வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுடைய தாமரைப்பாதங்களில் இருந்துகொண்டு ஸ்ரீல பிரபுபாதா மற்றும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் எண்ணங்களை நிறைவேற்ற ஒரு கருவியாக இருந்திட இந்த உபயோகமற்ற ஜீவன்மேல் கருணைகாட்டி, ஆசிர்வாதங்களை வழங்கிட கோடானுகோடி முறை வேண்டிக்கொள்கிறேன்.
தங்களுடைய நிரந்தர சேவகன்,
மணி முகுந்த தாஸன்
Manimukunda Dasa(Diksa),
Coimbatore, India