ஹரே கிருஷ்ண,
எல்லாப்புகழும் குரு கிருஷ்ணருக்கே.
நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்டாய பூ-தலே
ஸ்ரீமதே ஜெயபதாகா-ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய்-க்ருப-ப்ரதாயினே
கௌர-கத தாமதாய நகர-க்ராம தாரிணே
அன்பிற்குரிய குரு மஹாராஜர் உங்களுடைய தாமரைப்பாத கமலங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
எல்லாப்புகழும் பிரபுபுhதருக்கே.
என் வாழ்க்கையில் குரு மஹாராஜர் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன்.
முதன்முறை நான் ஜெகந்நாதர் கோயிலுக்கு வரும்போது எனக்கு ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா யார் என்றுகூட தெரியாது. ஆனால் மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி கிடைத்தது. நான் எங்கெல்லாம் தேடி அலைந்தேன். ஆனால் குருமஹாராஜர் அவர்கள் கருணையால் நான் உண்மையான இடத்திற்கு வந்துள்ளேன் என்று எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
ஒருமுறை நாங்கள் குடும்பத்துடன் கிருஷ்ணர் கோவிலுக்கு இஸ்கானிற்கு வந்தோம். அப்போது கூறினார்கள் இன்றும் 1 மணி நேரம் இருங்கள். குரு மஹாராஜர் வருகிறார் என்று கூறினார்கள் நாங்களும் வெயிட் பண்ணினோம்.
அப்பொழுது குருமஹாராஜர் அவர்கள் வந்தார்கள் என்னையறியாமலேயே அவருக்கு நமஸ்காரம் செய்து மிக மிக ஆனந்தமடைந்தோம். இது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்தது. மறுபடி பாகவதம் கிளாஸ், பிரசாதம் இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மறக்கமுடியாத நிகழ்ச்சியாக உள்ளது.
நான் தங்களை அடைந்ததில் பேரதிர்ஷடம் செய்துள்ளேன். ஏன் என்றால் மனித குலத்திற்கு தேவையான உண்மையான பர உபகாரமான கிருஷ்ண பக்தியை தந்துள்ளீர்கள்.
தங்களின் கருணையில்லாமல் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்ய இயலாது.
ஒவ்வொருவரிடமும் கிருஷ்ண பக்தியை கொண்டு சேர்ப்பதற்கு என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று தங்களை பிரார்த்திக்கின்றேன்.
இப்படிக்கு
உங்கள் தாஸன்
ரத்தனாங்க ராம தாஸன்
Ratnanga Rama Dāsa (Diksa),
Coimbatore, India