நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்டாய பூ-தலே
ஸ்ரீமதே ஜெயபதாகா-ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய்-க்ருப-ப்ரதாயினே
கௌர-கத தாமதாய நகர-க்ராம தாரிணே
தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மகராஜ் வியாச பூஜைக்கு பக்தா;கள் போற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு குரு மஹாராஜரை பற்றி அதிகம் தெரியாது. மஹாராஜரைப் பற்றி நிறைய பக்தர்கள் புகழ்ந்து சொல்வதை கேட்டு இருக்கிறேன். நான் 2017 ஜனவரியில் குரு மகராஜரிடம் தீட்சை பெற்றேன். அப்போது தான் குரு மகராஜரை நேரில் பார்க்கும் பாக்கியத்தை பெற்றேன். இதற்கு முன் குரு மகராஜரை பார்த்திராத துர்பாக்கியசாலியாக இருந்தாலும், முதன்முதலில் பார்க்கும்போது தீட்சை பெற்றதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதன்பிறகு சென்னையில் தேரின்போது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குரு மஹாராஜர் கொடுக்கும் சொற்பொழிவு ஆங்கிலத்தில் கொடுப்பதால் என்னால் கேட்கமுடியவில்லை. என்றாலும் அவரது சிஷ்யர்கள் மூலமாக கேட்டு அறிகிறேன். குரு மஹாராஜர் திருச்சிக்கு செல்லும் போது ஸ்ரீராம் வீட்டில் சிலமணி நேரம் தங்கி ஓய்வெடுத்து வருவார்கள். அப்படி அவர்கள் தங்கி ஓய்வெடுத்த வீட்டில் நாங்கள் குடும்பத்தோடு ஒரு வருட காலம் குடியிருந்தோம். அதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. குருமஹாராஜர் வந்து 35 ஆயிரத்துக்கு மேல் சீடர்களை உருவாக்கி இருக்கிறார். அவர் மேலும் நிறைய பக்தர்களை உருவாக்குவார் அப்படி உருவாக்க நான் பகவானிடம் பிரார்த்தனை செய்கிறேன். மேலும் குரு மஹாராஜர் இப்போது கொஞ்சம் உடல் நலக்குறைவாக இருக்கிறார் என்பதால் மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. அவர் நலம் பெற்று கோவை மாநகரம் வரவேண்டும் என்று பக்தர்கள் ஆவலாக உள்ளோம். குரு மஹாராஜரின் கருணையால் தான் தீட்சை பெற்றேன். நான் முடி அளவிற்கு பகவானுக்கும் பக்தர்களுக்கும் செய்வேன். நான் பக்தியில் மேலும் உயர்வு பெறுவதற்கு உங்கள் கருணையை பெற விரும்புகிறேன். குரு மஹாராஜர் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது நான் செய்த பாக்கியமாக நினைக்கிறேன்.
இந்த பாவி பெருங்கடலில் இருந்து நம்மை விடுவித்து ஆன்மீக உலகமான பகவானின் கோலோக விருந்தாவனத்திற்கு கரையேற்ற வந்த கருணை கடலாக திகழ்கிறார் நம்ம குரு மஹாராஜர் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜர் என்பது அளவிற்கு அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது. (பக்தர்களுக்கு)
குரு மஹாராஜரை பற்றி சொல்ல இந்த வாய்ப்பு கிடைக்கபெற்றமைக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
ஹரே கிருஷ்ண,
இப்படிக்கு,
கலாவதி சுகோபி தேவி தாஸி
Kalavati Gopika Devī Dāsī (Diksa),
Coimbatore, India