Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Nikunja Rādhikā Devī Dāsī (Diksa), (Chennai - India)

என் அன்புள்ள ஆன்மீக தந்தை அவர்களுக்கு,

தயவுசெய்து என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்டாய பூ-தலே
ஸ்ரீமதே ஜெயபதாகா-ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய்-க்ருப-ப்ரதாயினே
கௌர-கத தாமதாய நகர-க்ராம தாரிணே

உங்களிடம் சிஷ்யையாக இருப்பதற்கு மிகவும் திருப்தி கொள்கிறேன் குரு மஹாராஜர்.

ஓ, போற்றுதலுக்குரிய குரு மஹாராஜர்,

தாங்கள் பகவான் சைதன்ய மகாபிரவுவின் உண்மையான பிரதிநிதி குரு மஹாராஜர். நீங்கள் மட்டுமே எங்களுக்கு, ஆத்மாவிற்கும், உடலுக்கு உள்ள வித்யாசத்தை பற்றி முதன்முதலில் எடுத்துரைத்தீர்கள் குரு மஹாராஜர். மற்றும் கிருஷ்ண உணர்வில் இருந்தால் எங்கள் வாழ்வை எப்படி வழி நடந்த முடியும் என்பதை பற்றியும் கற்றுக் கொடுத்தீர்கள் குரு மஹாராஜர்.

ஓ, குரு மஹாராஜர்,

தாங்களே எல்லோருக்கும் முன்னோடியாக இருக்கிறீர். எப்படி தங்களின் குருவின் கட்டளைகளை இந்த முடியாத நிலையில் நிறைவேற்றுகிறீர்கள் என்று நடைமுறையில் நீங்கள் எங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள் குரு மஹாராஜர் உங்களின் ஆன்மீக சக்தியின் மூலம் என் தூய்மையில்லாத உடலுக்கும், ஆத்மாவிற்கும் சக்தியளித்தீர்கள். நீங்களே எங்களின் உண்மையான தந்தை ஆவீர் குரு மஹாராஜர்.

ஓ பதிதபாவன குரு மஹாராஜர்,

துன்பம் வரும் நேரத்தில் தங்களை நினைத்தாலே எல்லா துன்பங்களும் தூசி போன்று மறைகின்றன குரு மஹாராஜர்... எனவே தங்களின் பாத கமலங்களில் விழுந்து மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் குரு மகாராஜர். இந்த ஆதரவின்றி தவிக்கும் ஆத்மாவிற்கு தங்களின் கருணையை அளிப்பீர்களாக குரு மகாராஜா. மற்றும் இந்த முக்கியமற்ற சிஷ்யையை எப்பொழுதும் தங்களுக்கும், தங்களின் சிஷ்யர்களுக்கும் சேவை செய்யுமாறு மற்றும் கடல் போல் இருக்கும் அனர்த்தங்களிலிருந்தும் வெளி வருமாறும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன், குரு மகாராஜா, இவ்வாறு எப்பொழுதும் உங்கள் சிந்தனையில் இருக்குமாறு வாழ்த்துங்கள் குரு மகாராஜா!

இப்படிக்கு,

உங்களின் சிஷ்யை,

நிகுஞ்ச ராதிகா தேவி தாஸி

Nikunja Rādhikā Devī Dāsī (Diksa),
Chennai, India