Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Ūrjeśvarī Rādhā Devī Dāsī (Atlanta - United States of America)

எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தவத்திரு ஜயபதாகா சுவாமி அவர்களின் திருவடிப் பொற்தாமரைகளுக்கு என் மரியாதை கலந்த கோடானுகோடி நமஸ்காரங்கள்.

எல்லாப் புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே!!!

எல்லாப் புகழும் உங்கள் திருவடிப் பொற்பாதங்களுக்கே!!

குருதேவா, எப்பொழுதும் அபரிமிதமான கருணை மழையைப் பொழியும் உங்களை தீட்சா-குருவாகப் பெற்றது எங்களின் மிகச் சிறந்த அதிர்ஷ்டமாகும்.

தாங்கள், உங்களின் ஆசிர்வாதத்தால்  மட்டுமே, கிருஷ்ண உணர்வு பயிற்சியில் ஈடுபட எங்களை முயற்சி எடுக்கச் செய்கின்றீர்கள்.

எங்கள் சீக்‌ஷா-குருவான மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய  சைதன்ய அவதாரீ பிரபு, ரஸமயீ மாதாஜீ மற்றும் மரியாதைக்குரிய தங்களை சந்தோசப்படுத்தும்விதத்தில் நாங்கள் குடும்பத்துடன் சேவையில்  என்றும் ஈடுபட வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாகும்.

அதற்காக நான் கற்பக விருக்ஷமான உங்களின் கருணை மற்றும் ஆசிர்வாதத்தை மட்டுமே சார்ந்திருக்கின்றேன்.

உங்களின் தரிசனத்தைப் பெறும் பாக்கியத்தை தரும் ஜூம் வகுப்பு எங்களின் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு அனைவருக்காக வாழும் தங்களின் பார்வை பட்டாலே எங்கள்  மனமும் இதயமும் தூய்மையடையும்.

நாங்கள் அறியாமையால் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது உங்களின் தாமரைப்பொற்பாதங்களுக்கு தவறிழைத்திருந்தால் தயவு கூர்ந்து எங்களை மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நாங்கள் பகவான் நாமத்தின் மேல் பற்று கொண்டு தெளிவாக உச்சாடனம் செய்யவும், அனைத்தையும் பகவானின் கருணையாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் பிரச்சாரத்திற்கான தூய்மையையும், ஆன்மீக சக்தியையும், தைரியத்தையும் நாங்கள் பெறுவதற்கு தயை கூர்ந்து எங்களுக்கு என்றும் ஆசி வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

உங்களின் கருணையினால் மட்டுமே சேவையில் ஈடுபட விரும்பும், உபயோகமற்ற,

ஊர்ஜேஸ்வரீ ராதா தேவீ தாஸீ

(தீட்சை பெற்ற மகள்)

(NRJD பெங்களூரு யாத்திரை)

அட்லாண்டா, அமெரிக்கா.