Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Lalitā Bhaktimati Devī Dāsī (Dāmodara Deśa - Middle East)

எனது அன்பான,கருணையே உருவான தந்தைக்கு மகளின் நன்றி மடல்,

அப்பா,, உங்கள் நலனே, எங்கள் நலன். உங்கள் கருணையாலும், ஆசிர்வாதத்தாலும் மட்டுமே, இந்த பூமியில் அமைதியோடு வாழ முடிகிறது. வாழ்வின் பாதையில் எத்தனை குழப்பங்கள், கவலைகள், சந்தோஷங்கள், வெற்றிகள் வந்தபோதும் அவை அனைத்தும் கணநேரத்தில் மறையும் மேகத்தைபோன்றதென்பதை உணர முடிகிறது. பகவான் ஸ்ரீ ஹரிக்கும், குருவிற்கும், வைஷ்ணவ அடியவர்களுக்கு செய்யும் சேவையே இன்றும், என்றும் மாறாத ஒன்று என்பதை உங்கள் கருணையால் அறிகிறோம் அப்பா. ஹரி நாம ஜபம் நல்ல முறையில், அனர்த்தங்களை தவிர்த்து, பரிபூர்ணமாக ஜபம் செய்யும் மனதை தாங்களே அருள வேண்டும். எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள் அப்பா. கணவரும் (கந்தசாமி), பிள்ளைகளும் (நிதிஷ், நிஷால்) நல்லமுறையில் கிருஷ்ண பக்தி பாதையில் பயணிக்க, குரு,கௌரங்க மஹாப்ரபுவிற்கு சேவை செய்யும் பெரும் பாக்யத்தை தந்தருள வேண்டும் அப்பா. உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அப்பா. உங்கள் பொற்பாத சேவையே எங்களின் ஒரே காப்பு. உங்கள் திருமுகத்தை தரிசிக்க ஆவலோடு இருக்கிறோம் அப்பா.

உங்கள் கருணையாலும்,அன்பினாலும் வாழும் ஜீவன்.

லலிதா பக்திமதி தேவி தாசி

Your servant,

Lalitā Bhaktimati Devī Dāsī

Dāmodara Deśa Yātrā