“ஓம் அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா
சக்ஷுருன் மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:”
நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண ப்ரஸ்டாய பூதலே ஸ்ரீ-மதே ஜெய பதாக ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சாரியா பாதாயா நிதாய் க்ருப ப்ரதாயினே கௌர கதா தாம தாய நகர க்ராம தாரினே”
எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே!!!! எல்லா புகழும் நிதாய் கௌர சுந்தரருக்கே!!!! எல்லா புகழும் தங்களின் தவ திருவிற்கே!!!!
ஹரே கிருஷ்ணா குரு மஹராஜ் எங்களது மரியாதை கலந்த பணிவான நமஸ்காரங்களை தங்களின் திருவடித் தாமரை பாதங்களில் அன்போடு சமர்ப்பிக்கின்றோம்
“சகு தான் திலோ ஜேய்,ஜன்மே ஜன்மே ப்ரபு ஸேய்,
திவ்ய ஜ்ஞான் ஹ்ருதே ப்ரோகஷிதோ
ப்ரேம பக்தி ஜாஹா ஹோய்தே,அவித்யா வினாஷ ஜாதே
வேதே காய் ஜாஹார சரிதோ”
எங்களுக்கு ஞானக் கண்ணை பரிசாக கொடுத்த தாங்களே பிறவி தோறும் ஆன்மீக குருவாக இருக்க வேண்டும் என்பது எங்களது தாழ்மையான விண்ணப்பம்....
தங்களின் கருணையால் தான் ஆன்மீக அறிவானது எங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறது. இதுவே எங்களின் அறியாமையை நீக்குகிறது. தங்களின் காரணமற்ற கருணையே நாங்கள் விரும்பும் பிரேம பக்திக்கும் சுத்த நாமத்திற்க்கும் வித்தாகிறது....
அனைத்து வேதங்களும் தங்களின் புகழை எடுத்துரைக்கும் பொழுது அதற்குமேல் தங்களைப் பற்றி நாங்கள் என்ன கூற இருக்கிறது இருப்பினும் எங்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் எங்களை தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவும் தங்களுக்கு புகழாரம் சூட்டுவதை ஒரு பெரும் வாய்ப்பாக கருதுகின்றோம்...
Wonderful KṚṢṆA.... Wonderful Gaurāṇga.....
Wonderful Gurudeva...... பகவான்ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் பகவான் கௌராங்கர் பற்பல அற்புதங்களை நிகழ்த்தினார்கள். தாங்களும் அதுபோலவே தற்காலத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறீர்கள்....
Most Merciful Lord Gaurāṇga...
Most Merciful Gurudeva....
பரம கருணா மூர்த்தியான பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வைப்போல் தாங்களும் பெரும் கருணாமூர்த்தி ஆவீர்கள்... கட்டுண்ட ஆத்மாக்களின் நிலைகண்டு கௌர பிரேமையையும், ஹரி நாமத்தையும் உலகம் முழுவதும் வினியோகித்து வருகிறீர்கள்.....
இதுவே தங்களின் காரணமற்ற கருணை....
Most Compassionate Śrīla Prabhupāda....
Most Compassionate Gurudeva....
ஸ்ரீல பிரபுபாதர் இவ்வுலகில் இரக்க குணத்திற்கு தலை சிறந்த உதாரணம் ஆவார். வழிமாறி சென்றுகொண்டிருந்த மனிதர்களை நல்வழிப்படுத்தி கிருஷ்ண பக்தியை அவர்கள் மனதில் விதைத்து “ஹிப்பிகளையும் ஹேப்பி “களாக மாற்றினார்....
தாங்களும் தங்களின் ஆன்மீக குருவின் பாத சுவடுகளை பின்பற்றி அவரைப்போலவே இவ்வுலகில் உள்ள அனைவரிடமும் இரக்கம் காட்டுகிறீர்கள்... தங்களின் இரக்க குணத்திற்கு அளவுகோல் என்பதே இல்லை ஒரு முறை ஸ்ரீ ஶ்ரீஜெகநாதர் தேர்த்திருவிழாவில் ஒரு பெண்மணி தனது கையில் மாமிச பொட்டலத்தை வைத்துக்கொண்டு தேர் திருவிழாவை பார்த்து ஏங்கி கொண்டிருக்கும் பொழுது தாங்கள் அப்பெண்மணியின் மீது மிகவும் இரக்கம் காட்டி அந்த மாமிச பொட்டலத்தை பொருட்படுத்தாமல் தாங்கள் வாங்கி வைத்துக்கொண்டு அந்தப் பெண்மணியை கைகளைக் கழுவிக் கொண்டு ஸ்ரீ ஜெகநாதரின் தேர்வடம் பிடித்து இழுக்குமாறு அறிவுறுத்தினார்கள். அப்பெண்மணி மீது இரக்கம் காட்டி ஸ்ரீ ஸ்ரீ ஜெகந்நாதர் பலராமர் சுபத்திரா தேவியின் பெரும் காருண்யத்தை பெற்று தந்தீர்கள் இந்த இரக்க குணம் ஆனது தங்களின் ஒரு கல்யாண குணமாகும்....
இந்த வருடம் நடைபெற்ற “ILS” கருத்தரங்கில் பங்கேற்றபோது தினந்தோறும் “ILS” கருத்தரங்கிற்கு வரும் போதெல்லாம் தங்களுடைய திவ்ய தரிசனத்தை கிடைக்கப்பெற்றேன். மேலும் தங்களுடைய ஆசிர்வாதத்தையும் எனக்கு அளித்து பேரானந்த கடலில் மூழ்கடித்தீர்கள்....
மீண்டும் மீண்டும் எனது அனந்தகோடி நமஸ்காரங்களை தங்களின் தாமரை திருப்பாதங்களில் மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றேன்....
குறிப்பாக தாங்கள் “பக்தி வைபவ்” பட்டம் பெற்ற போது தங்களின் அர்ப்பணிப்பும், உத்வேகத்துடன் சாஸ்திரங்களை முறையாக படிப்பதன் முக்கியத்துவத்தையும் அறிந்து மிக உற்சாகம் அடைந்தேன்...
ஸ்ரீல பிரபுபாதரின் சேனாபதி பக்தராகிய தாங்கள் எப்பொழுதும் வெற்றிக் கொடியை கையில் ஏந்தி மாயையுடன் போரிட்டு கௌர பிரேமையை அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கி வெற்றி கண்டு வருகிறீர்கள்.. இதேபோல் நூற்றாண்டு காலம் பூரண உடல் நலத்தோடு இருக்க பகவான் ஸ்ரீ நரசிம்ம தேவரிடம் எங்களது இதயபூர்வமான பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம். தங்களது 74 - வது வியாச பூஜை நன்னாளில் தங்களின் ஆசீர்வாதத்தை யாசிக்கின்றோம்...
என்றென்றும் உங்கள் சேவையில் தங்களின் கீழ்ப்படிந்த சேவகர்கள்
சேவ பராயண தாஸ்
சுந்தரேஸ்வரி ராதா தேவி தாஸி
துளசி
பத்ம ஶ்ரீ