அன்பார்ந்த குருமஹாராஜர்,
என்னை போன்ற வீழ்ந்து கிடக்கிற தாழ்ந்த ஆத்மாக்களுக்கு, இது ஒரு மறுபிறவி. உங்கள் JPS கேர் டேக்கர் மூலமாக எனக்கு சப்போர்ட் வந்தது.
எதற்காக நான் பிறந்திருக்கிறேன்? என்னோட பிறப்பின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் கிடைத்தது. எனக்கு என்ன நடக்கிறதோ அதைப் போலவே இன்னும் கீழே கிடக்கிற பாவப்பட்ட ஆத்மாக்களுக்கு, நீங்கள் ஒரு பெரிய சேவை செய்கிறீர்கள்.
எல்லா மக்களுக்குமான சேவையை, இந்த வயதிலும் நீங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்பதைப் பார்க்கும்போது, கொடுத்த வாக்கிற்காக உடம்பையே பொருட்படுத்தாமல், உங்கள் குருவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள். இந்த உடல்நிலை கூட ஒத்துழைக்காத நேரத்தில், உங்களது சாதனைகளை தவறாமல் செய்து, அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்துவிட்டீர்கள்.
உங்களைப் பற்றி பேசுவதற்கோ, உங்கள் முன்னிலையில் ஏதும் சொல்லுவதற்கோ எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனாலும், நீங்கள் எனக்குக் கொடுத்த மறுவாழ்வுக்கு கைமாறாக ஏதும் செய்ய முடியாமல் இருப்பது என் இதயத்தில் வேதனையை ஏற்படுத்துகிறது.
அதனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இந்தக் கடிதத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன், குருமஹாராஜர்.
கிருஷ்ணர் உங்களுக்கு பூர்ண ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன், மஹாராஜர்.
என்னைப் போல கீழே கிடக்கிற ஆத்மாக்களை நீங்கள் அதிகம் தூக்கி வைத்திருக்க வேண்டும்.
நான் சந்திக்கும் எல்லோரிடமும் பகவான் நாமத்தை சொல்கிறேன், ஆனால் யாருக்கும் பகவான்மீது நம்பிக்கை வரவில்லை.
அதைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. எல்லோரும் தங்களது பிறப்பின் நோக்கத்தை அறியாமல் இங்கே இப்படி கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணம் வருகின்றது.
எனக்கு பிரீச்சிங் பண்ண வேண்டும் என்ற பேராசை இருக்கிறது, குருமஹாராஜர்.
எல்லா ஆத்மாக்களுக்கும் ஒரு சாட்சியாக இருந்து, பகவானுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.
அந்த ஆத்மாக்களை பகவானின் பாதத்தில் சேர்க்க வேண்டும். கிருஷ்ண பக்தியில் நாம் மென்மேலாக வளர வேண்டும்.
என்னுடைய சாதனைகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.
இப்படி பாவப்பட்ட ஆத்மாக்களுக்கு (என்னைப் போல) பகவானைப் பற்றிய ஞானத்தை சொல்வதற்கு, என் வார்த்தைகளை சக்திவாய்ந்ததாக மாற்ற, உங்களது கருணையும், வாழ்த்துக்களும் வேண்டும், மகாராஜ்.
உங்களிடம் வரத் தகுதி எனக்கு இல்லை.
மனதளவில் மிகவும் நெகிழ்ந்து, உங்களுடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறேன், மஹாராஜர்.
உங்களைத் தொடரவும், உங்கள் பக்கத்தில் வரவும் எனக்கு அருகதையில்லாத, கீழ்தரமான பாவி தான் நான்.
உங்கள் கையால் initiation (தீட்சை) பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
ஆனால் நான் இன்னும் shelter கூட எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் ஏதோ, உங்களிடம் நன்றியைச் சொல்வதற்கான பாக்கியத்தை கிருஷ்ணர் எனக்குக் கொடுத்திருக்கிறார்.
அவருடைய காரணமற்ற கருணை இல்லையென்றால்,
ஸ்ரீல பிரபுபாதரின் கருணை இல்லையென்றால்,
உங்களுடைய காரணமற்ற கருணை இல்லையென்றால் –
இந்த ஆத்மா எப்போதோ இந்த உடம்பை விட்டே போயிருப்பேன், மகாராஜ்.
அதற்காக கோடிக்கணக்கான நன்றிகள், மஹாராஜர்.
என்னுடைய வார்த்தைகளில் ஏதாவது தவறு இருந்தால், தயவு செய்து மன்னித்துவிடுங்கள், மகாராஜ்.
கிருஷ்ண பக்தியில் வளர்வதற்காக,
உங்களுடைய ஆசீர்வாதங்களும்,
உங்களுடைய பிரார்த்தனைகளும் எனக்கு தேவை, மஹாராஜர்.
எனக்காக பிரார்த்தனை பண்ணிக்கொங்க, மஹாராஜர்.
இப்படிக்கு,
உங்கள் அடிமை,
ஜெயந்தி கணேசன்