Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Lalitā Bhaktimatī devī dāsī (Dāmodara Deśa - Middle East)

 

                           குருமஹராஜ்!

கெளரஹரியின் நித்யதாசனான

எங்கள் குருமஹராஜர் பல்லாண்டு வாழ்க! வாழ்க!

 

புன்னகைப்பூக்கும் அவரது திருமுகம் மட்டுமே

நம் மனத்திரையின், கவலைகளுக்கெல்லாம்

அருமருந்து!

தேவதூதரான பிரபுபாதர்மேல் அவர்

வைத்துள்ள பிரியம் ஒரு தாய்க்கும், சேய்க்குமான

பரிபூரண உறவு!

 

எம்மை தாயாய்,தந்தையாய் வழி நடத்தும்

குருமஹராஜரின் ஒவ்வொரு வார்த்தைகளும்

மனதை தூய்மைப்படுத்தும் சொற்க்கவசம்!

அறியாமையால் வீழ்ந்த

இந்த ஆத்மாக்களை

கரை சேர்க்க வந்த கருணைக்கடல்

எங்கள் குருமஹராஜர்!

 

ஒவ்வொரு நொடியும்,

காத்திருக்கிறோம் தலைவா..

உங்கள் அன்புக்கட்டளைக்காக!

உம் பொற்பாதங்களுக்கு சேவை செய்யவே

உயிர் சுமக்கிறோம் அய்யா!

 

உங்கள் உயிர்மூச்சாய் தாங்கள்

சுவாசிக்கும் ஹரி நாமத்தை,

எல்லோருக்கும் தந்திட்ட

தங்களின் குருசம்பந்தம்

இப்பிறப்பின் பெரும்பேறு !

 

இந்த பூமியில் தாங்கள் உதயமான இந்நாளின்

ஒவ்வொரு நொடியும் வந்தனத்திற்க்குரியது!

மனதிற்கு பேரனந்தத்தை அளிக்கும் உங்கள் அன்பே

என்றும் துணை எங்களுக்கு!

 

 

உங்கள் அன்பு மகள்,

லலிதா பக்திமதி தேவி தாசி.தாமோதர தேசம்,துபாய்.

 

 

Your servant,

Lalita Bakthimati Devi Dasi

Damodarsesh Yatra 

Dubai