Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Nandalālā Kiśora dāsa (Mayapur - India)

எனதன்புள்ள குருமஹராஜ் அவர்களுக்கு,

தங்களுடைய தாமரைப்பாதங்களில் அர்ப்பணிக்கும் எனது தாழ்மையான மரியாதைகலந்த கோடானுகோடி வணக்கங்களை தயவுசெய்து  ஏற்றுக் கொள்ளுமாறு இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.

எல்லாப்புகழும் குரு மற்றும் கௌராங்கருக்கே உரித்தாகுக!!!!!

எல்லாப்புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே உரித்தாகுக!!!!!

என்னுடைய முதல் சேவை உங்களை  போற்றுவதேயாகும். இந்த அவதார வியாச பூஜை திருநாளில் உங்களை போற்றுவதில் நான்  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நீங்கள் எனக்கு கிடைத்த பொக்கிஷம் (கற்பகவிருட்சம்) ஆவீர்..

நான் உங்களுக்கு, ஸ்ரீல பிரபுபாதருக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துவருகிறேன். மேலும் இந்த சேவை என் ஆயுட்காலம் மற்றும் அடுத்தடுத்த ஆயுட்காலமும் ( நீங்கள் எப்போது கீழ் உலகிற்கு வந்தாலும் அப்போது நானும் உங்களுக்கு சேவை செய்ய விருப்பப்படுகிறேன்) தொடரவேண்டும் என்று இந்த நன்னாளில் நான் உங்களிடமும் மற்றும் ஸ்ரீல பிரபுபாதரிடம் வேண்டி கேட்டுகொள்கிறேன்.

இப்படிக்கு

தங்களின் சேவகர்களின் சேவகர்களின் சேவகர்களின் சேவகர்களின்

சேவகர்களின் சேவகன்

 

நந்தலாலா கிஷோர தாஸ்

JPS Archives & Publications

Mayapur.