Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Maha Yoga Narasimha Dasa (Srirangam - India)

ஹரே கிருஷ்ணா

எல்லாப்புகழும் குரு மற்றும் கௌராங்கருக்கே

என் அன்பிற்குரிய ஆன்மீக குருவே என் தந்தையே. தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி ஸ்ரீல குருதேவரே உங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள்.

தங்களை பற்றி எழுதுவதற்கோ, பேசுவதற்கோ எனக்கு எந்த ஒரு தகுதியுமில்லை. இருந்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீல பிரபுபாதா மற்றும் உங்கள் கருணையினால் ஒரு சிலவற்றை கூற முயற்சிக்கின்றேன். மகத்தில் பிறந்த மகானே. என் ஆன்மீக குருவே. தங்களை பற்றி எழுதுவதற்கு என் மனம் துடிக்கின்றது. ஆனால் எழுத்துகள் வரவில்லை.

தாங்களே இந்தியாவின் மிகப்பெரும் பொக்கிஷம். தாங்கள் இன்றி மாயாப்புர் இல்லை. மாயாப்புர் இன்றி நீர் இல்லை. நான் முதன்முதலில் தங்களை தரிசனம் செய்ததே என்னுடைய குருஆஷ்ரயா அன்று தான். என்னுடைய பாக்கியம் நான் முதலில் தரிசனம் செய்யும்போதே எனக்கு நீங்கள் ளநடவநச வழங்கியதான். 

ஸ்ரீல பிரபுபாதரின் நவரத்தினங்களில் ஒருவரே என் ஆன்மீக குருவே. ஜெகந்நாதருக்கு மிகவும் பிரியமானவரே. ஜெயபதாக ஸ்வாமியே என் ஆன்மீக குருவே. நீர் அமெரிக்காவில் பிறந்தாலும் நீர் இந்தியரே. சிம்மத்ததின் சிங்க ரூபமோ நீர். என் ஆன்மீக ருவே. ஸ்ரீல பிரபுபாதரை உயிர்மூச்சாககொண்ட என் ஆன்மீக குருவே. தத்துவத்தின் தத்துவமே. என் ஆன்மீக குருவே. உங்கள் உடல் உபாதைகளை பொருட்படுத்தாமல் எந்நிலையிலும் ஸ்ரீல பிரபுபாதரின் உபதேசங்களை கொண்டு பக்தர்களிடம் செலுத்துவதிலேயே முன்மையாய் இருக்கிறீர்கள் என் ஆன்மீக குருவே. ஆன்மீக குருவே நீர் என் வாழ்க்கை ஒரு வெற்றிடமே. கருணையின் அவதாரமே என் ஆன்மீக குருவே. பிறவிதோறும் நீர் மட்டுமே என் ஆன்மீக குருவாக வேண்டும். எனக்கு உங்களிடம் தீக்ஷை வாங்குவதற்கே தகுதியற்றவன் நான். இருந்தும் என் குருநாதரே நீர் அதையும் வழங்கினீர்கள். உங்களிடமிருந்து நான் பலவிஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. நித்தியானந்த பிரபு கருணையின் அவதாரம். நீர் கருணையின் கருணா அவதாரம். நான் உங்களிடமிருந்து பலமுறை கேட்ட ஒருசொல், மாயாப்புர் தாமத்தை விரிவுபடுத்துவது மற்றும் கௌடிய மடங்களை இஸ்கானுடன் இணைப்பது மற்றும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை விநியோகிப்பது மற்றும் பக்தி விருக்ஷா. பக்தி விருக்ஷவை முதலில் ஸ்ரீ நித்தியானந்த பிரபு தான் நிறுவினார். ஆனால் அது 500 வருடங்களுக்கு முன்பு. தற்போது பக்தி விருக்ஷாவின் உயிர்மூச்சே என் ஆன்மீகவே. நீங்கள் எங்கு சென்றாலும் முதலில் பக்தி விருக்ஷா பக்தர்களுக்கே முதல் தரிசனம்.

இப்படிக்கு,

தங்களின் உண்மையுள்ள சேவகன்

மஹா யோக நரசிம்ம தாஸன், ஸ்ரீரங்கம்

Maha Yoga Narasimha Dasa (Diksa), Srirangam, India