Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Indra Sakhi Sevikā Devī Dāsī (dīkṣā), (Chennai - India)

நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்டாய பூ-தலே
ஸ்ரீமதே ஜெயபதாகா-ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய்-க்ருப-ப்ரதாயினே
கௌர-கத தாமதாய நகர-க்ராம தாரிணே

 ‘பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவரும் அவரது தாமரைப்பாதங்களில் தஞ்சமடைந்தவருமான என்னுடைய குருதேவரின் தாமரைப்பாத கமலங்களுக்கு என்னுடைய கோடிக்கணக்கான வணக்கங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கின்றேன்.

நித்யானந்த பிரபுவின் கருணையை பெற்ற என்னுடைய குருதேவரே, உங்களுடைய தாமரைப்பாத கமலங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.

என்னுடைய குருதேவரே உங்களை போற்றுவதற்கான வாய்ப்பினை நல்கியதற்காக நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஸகல மரியாதைகளையும் தங்களுக்கே சமர்ப்பிக்கின்றேன். பல குற்றங்கள் புரிந்து இருப்பினும்கூட, என்னை மன்னித்து எனக்கு தீட்சை அளித்தீர்கள். குருதேவரே தங்களுடைய தாமரைப்பாத கமலங்களுக்கு என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுயிர் ஆன்மீக குருவே தாங்களே கருணைக்கடலாவீர். தாங்களே வைஷ்ணவர் என்பதின் உண்மைப்பொருளாவீர்.

குருதேவரே நீங்கள் கிருஷ்ண உணர்வை வழங்குவதின் மூலமாக மக்களை காப்பதைபற்றிய எண்ணத்திலேயே எப்போதும் ஆழ்ந்திருக்கின்றீர்கள்.

உங்களுடைய சேவை அளவிட முடியாதவை. வரலாற்றில் இதுவரை காணாத அளவில் தங்களிடம் மட்டுமே கணக்கில் அடங்காத பக்தர்கள் அடைக்கலம் பெற்று அற்புதமான கிருஷ்ண உணர்வை தங்களிடமிருந்தே பக்தர்கள் பெற்றுள்ளனர்.

உடல் ஒருபோதும் பிரச்சாரத்திற்கு தடையில்லை என்பதினை நிரூபித்து காட்டியுள்ளீர்கள்.

தாங்கள் எப்போதும் இரக்கமும், கருணையும் கொண்டவராவீர். ‘குருதேவரே” எனது சாஷ்டாங்க நமஸ்காரங்களை தங்களுடைய தாமரைப்பாதங்களில் சமர்ப்பித்து நான் தெரிந்தோ தெரியாமலோ செய்துள்ள குற்றங்களிலிருந்து என்னை ‘மன்னித்தருளும்படி” வேண்டுகின்றேன்.

குருதேவரே நான் பக்திசேவையில் ஒவ்வொரு அடியிலும், முழு நம்பிக்கையுடனும் உறுதியுடனும் செயலாற்ற வேண்டும். எக்காரணத்திற்காகவும் ஒருபோதும் நான் தளராமல் இருப்பதற்காக என்னை மன்னித்து ஆசிர்வதிப்பீராக.

தங்களுடைய கருணையை எப்பொழுதும் எனக்கு தந்தருள வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

ஹரே கிருஷ்ணா

இந்திர சகி சேவிகா தேவி தாஸி, துறையூர்

Indra Sakhi Sevikā Devī Dāsī (dīkṣā),
Thuraiyur, India