Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Kavirupa Gopika Devī Dāsī (Diksa), (Chennai - India)

எனது ஆன்மீக குருவான அருள்திரு ஜெயபதாக சுவாமின் குரு மஹாராஜர் தாமரைப்பாதங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.

ஆன்மீக உலகங்களின் சிகரமாக கோலோக விருந்தாவனம் விளங்குவது போல ஸ்ரீல பிரபுபாதரின் தெய்வீகமான சீடர்களின் சிகரமாக விளங்கும் எனது குருதேவரின் மேன்மையை விளக்க இயலாதவளாக இருப்பதால் எனது குருதேவரின் தாமரைப்பாதங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.

ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்தி கோஸ்வாமியின் சீடர்களில் அவரின் ஆணைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தன்னிகரற்ற சீடராக விளங்கிய ஸ்ரீல பிரபுபாதரின் ஆசிர்வாதங்களை முழுமையாக பெற்ற குருமஹாராஜர் தனது குருதேவரைப்போலவே உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும் கருணை கடலாக விளங்குகிறார். அவரின் தாமரைப்பாதங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

எனது குருதேவருக்கு நான் செய்யும் வாணி சேவைகளை இன்னும் நன்றாக செய்ய முயற்சி செய்வதின் மூலமும், எனது அத்தாரிட்டியும், எங்களின் நலன் விரும்பியும், என்னை வழி நடத்திச்செல்பவரும், எனது குரு மகராஜரின் பிரதிநிதியாக செயல்படும் ருக்மிஹா பிரபுவின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடக்க முயற்சி செய்வதின் மூலமும் குரு மகராஜருக்கு எனது சேவைகளை அர்ப்பணிக்கின்றேன்.

அங்கீகரிக்கப்பட்ட குரு சீட தொடரில் வருபவர்களான ஸ்ரீல பக்தி வினோத தாகுரர், ஸ்ரீல கௌர கிஷோரதாஸ பாபாஜி, ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி, ஸ்ரீல பிரபுபாதர் போன்ற மாபெரும் பக்தர்களின் சீடத்தொடரில் வரும் நம் குருமஹாராஜர் அருள்திரு ஜெயபதாக சுவாமி குருமஹாராஜரின் ஆயிரக்கணக்கான சீடர்களில் நானும் ஒருத்தியாக இருப்பதை நினைத்து பிரமிப்பாகவும், இந்த நல் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு அதற்கு தகுதியுள்ளவளாக ஆக்கிகொள்வதற்காவும், எனது குரு தேவரின் தாமரைப்பாதங்களில் வேண்டி பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

இப்போது இருக்கும் உடல்நல குறைவிலும் எப்போதும் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கும் குரு மஹாராஜர் நான் இந்த உடல் அல்ல என்பதை நடைமுறையில் நமக்கெல்லாம் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார். ஸ்ரீல பிரபுபாதருக்காக தனது வாழ்க்கையே அர்ப்பணித்தும், ஸ்ரீல பிரபுபாதாரை தனது உயிர் மூச்சாகவும் ஏற்று நம்மிடையே நடமாடிக்கொண்டிருக்கும் குரு மஹாராஜர் நமக்கெல்லாம் சக்தியையும், உற்சாகத்தையும் கொடுத்து கொண்டிருக்கிறார். அவர் நம்மிடையே இன்னும் பல வருடங்கள் இருக்க வேண்டும் என்றும், இந்த கலியுக மக்களை கறையேற்றுதவதற்காகவும், குரு மகராஜரின் நலன் வேண்டி அவரது ஆயிரக்கணக்கான சீடர்களின் பிரார்த்தனைகளை ஸ்ரீ ஸ்ரீ கௌரநித்தாய், ஸ்ரீ நரசிம்ம தேவர், ஸ்ரீ ஸ்ரீ ராதா மாதவர் ஏற்று அருள்புரிய வேண்டுகிறேன்.

எனது குருதேவரின் பாத சேவையில் நான் என்றென்றும் இருக்கவேண்டும், அவரின் ஒரு துளி கருணைக்காகவும் எப்பொழுதும் அவரது பாத கமலங்களின் அடைக்கலத்தையும் வேண்டி இந்த மங்களமான வியாசபூஜை நாளில் குரு மகராஜரின் தாமரைப்பாதங்களுக்கு மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

கவிரூபா கோபிகா தேவி தாஸி, துறையூர்

Kavirupa Gopika Devī Dāsī (Diksa),
Thuraiyur, India