Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Mega Shyamala.Devi.Dasi (Srirangam - India)

நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்டாய பூ-தலே
ஸ்ரீமதே ஜெயபதாகா-ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய்-க்ருப-ப்ரதாயினே
கௌர-கத தாமதாய நகர-க்ராம தாரிணே

 ‘குரு மஹாராஜர் கீ ஜெய்”

‘குரு மஹாராஜர் பாத கமலங்களை நான் சரணடைகிறேன்.”

நான் முதல்முறையாக இஸ்கான் பக்தர்களோடு கோயம்பத்தூர் ரதயாத்திரைக்கு சென்றோம். அப்போது குருமகராஜரின் உபன்யாசம் பந்தலில் நடந்துகொண்டிருந்தது. அவரது கணீரென்ற குரலில் நான் கேட்டபோதும் எனக்கு இனம் புரியாத உன்னத உணர்வு ஏற்பட்டது. என் மனதில் ஒரு சந்தோஷம். அவரை திரும்ப திரும் பார்க்க மனம் தூண்டியது. ஜெகந்நாதர் இரத யாத்திரை முன்பாக அவர் பரவசத்துடன் பாடி ஆடிய என் கண்களைவிட்டு அகலவில்லை. அவருடைய கண்களில்தான் அவ்வளவு கருணை. பக்தர்களுடன் பாடி ஆடி பரவசத்துடன் சுற்றி சுற்றி வந்தார். அவருடைய பார்வை படாதா என்று பக்தர்கள் கூட்டம் அவர் பார்க்கும்போது எல்லாம் சுற்றி சுற்றி வந்தனர். குருமஹாராஜர், குரு மஹாராஜர், குருமஹாராஜர் என்று கோஷம் போட்டனர். அவருடைய உபன்யாசத்தை கேட்டபோது பக்தி இல்லாதவருக்கு கூட பக்திவந்துவிடும். அவர் கிருஷ்ணரைபற்றி கூறும்போது அந்த அபிநயத்துடன் கூறுவார். நாம் அந்த லோகத்தில் இருக்கிறமாதிரி உணர்வு ஏற்படும். திடீரென்று அவர் ஹரிபோல் ஹரிபோல் என்றும் கௌரங்கா, கௌரங்கா என்றும் கூறுவார்.

பேட்டரிக்கு சார்ஜ் போட்டதுபோல் நமக்கும் சார்ஜ் ஏறும். அவரைப்பார்க்கும்போது கருணையே வடிவான நித்தியானந்த பிரபுவின் சகாவாக நான் காண்கிறேன். நித்தியானந்த பிரபுவின் கருணையை நான் அவர் கண்களில் கண்டேன். குருமஹாராஜர் அவர்கள் எனக்கு ஆன்மீக குருவாக கிடைத்தது நான் செய்த பாக்கியம். இந்த பாவப்பட்ட பெளதிக வாழ்க்கையில் இருந்து எனக்கு ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டியவர். ஆன்மீக குரு என்பவர் அங்கீகரிக்கப்பட்ட குரு பரம்பரையில் வந்தவராக இருக்கிறார். பிரம்மதேவரில் தொடங்கி நாரதமுனிவர், வியாசதேவர், மத்வாச்சார்யர் மற்றும் மாதவேந்திரபுரி பரம்பரையில் வந்தவர்களாக உள்ளோம். அவர் தன் உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் பிரச்சாரம் செய்கிறோம். பக்தர்களுக்கு பகவத்கீதை பாகவத வகுப்புகள், சைதன்யரைப்பற்றி பக்தர்களுக்கு எடுத்துச்சொல்கிறார். குருமஹாராஜர் பகவான் கிருஷ்ணருடைய சேவை செய்பவராகவும், பகவான் சேவையை தவிர வேறு எதுவும் தேவையில்லை என்றும் பெளதிகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பகவான் சேவையில் ஈடுபடவும் பகவானின் பக்தர்களாகவும் மாற்றுகிறார் தன்னுடைய பிரச்சாரத்தினையும் செய்கிறார். 

ஆன்மீக குரு இல்லாமல் அவருடைய கருணை இல்லாமல் நாம் பகவான் கிருஷ்ணரை அடையமுடியாது. நம்முடைய வாழ்வில் ஏஏற்படும் முன்னேற்றம் எல்லாம் குருவின் கருணையால்தான். அவர் இல்லாமல் எதுவும் நடைபெறாது. அவருடைய கருணை கிடைக்காவிட்டால் நாம் வெறும் ஜடம்தான். அதற்கு மதிப்பு கிடையாது. என்னுடைய குருமஹாராஜர் என்னை கிருஷ்ணரிடம் கூட்டிச்செல்வார். அவரை குருவாக அடைந்தது நான் செய்த பாக்கியம். அவரிடம் நான் தீட்சை வாங்கினேன். அவருடைய அளவற்ற கருணையினால் பிராமண தீட்சையும் பெற்றேன். பிராமண தீட்சை வாங்கிய இரவு வெகுநேரம் ஆகியும் பக்தர்களோடு உரையாடினார். அவர் உடல்நிலையை பற்றி கவலைப்படவில்லை. பக்தர்களிடம் இருப்பதை மிகவும் சந்தோஷமாக இருந்தார். அவர் காரின் அருகில் நின்றபோது குருமஹாராஜர் காரில் ஏறினார். குருமஹாராஜர் அருகில் சென்றேன். அவர் காரில் ஏறியபின் அருகில் சென்றேன். என்தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார். ஒருமுறை கோயம்புத்தூர் அவருடைய பக்தர்கள் எல்லாம் சேர்ந்து பார்க்கபோனோம். அப்போது அவர் எல்லோருக்கும் பூக்கள் கொடுத்தார். எனக்கு கிடைக்கவில்லை. நான் தனியாக நின்று இருந்தேன். பிறகு குருமஹாராஜர் என்னை கூப்பிட்டார். அருகில் சென்றேன். பெரிய மல்லிகை மாலை கொடுத்து ஆசிர்வாதம் செய்தார். அவருடைய கருணையால் என்னுடைய ஆன்மீக வாழ்க்கை தொடர்ந்து கொண்டு உள்ளது. அவர் பாதங்களை எப்போதும் சரணடைந்து உள்ளேன். அவர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலபோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ நான் கௌரங்களை பிரார்த்தனை செய்துகொள்கிறேன். 

பணிவுடன்

மேக ஸ்யாமள தேவிதாஸி

 நான் ஸ்ரீ ரங்கத்தில் சேவை செய்து வருகிறேன். என் குடும்பத்தில் நான் மட்டுமே பக்தராக உள்ளேன். என் கணவர் எனக்கு உதவியாக இருப்பார். அவருடைய கனவில் குரு மஹாராஜரை பார்த்தேன் என்று கூறினார். சமீபத்தில் நடந்தது பக்தர்கள் புடைசூழ குருமஹாராஜர் இருந்தார். நான் அவரிடம் சென்று அவர் பாதத்தை வீழ்ந்து வணங்கினேன். என்னை ஆசிர்வாதம் செய்தார் எனக்கூறினேன். பரவாயில்லை உங்கள் கனவில் குருமஹாராஜரை பார்த்துவிட்டீர்கள் எனக்கூறினேன்.

Mega Shyamala.Devi.Dasi(Diksa)
SriRangam, India