Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Kṛṣṇangi Gopika Devī Dāsī (Diksa), (Chennai - India)

ஜெய் கௌராங்கா என்றும் உங்கள் அன்புடன் கிருஷ்ணாங்கி கோபிகா தேவி தாஸி

அன்பும், பண்பும், கனிவும் பொழியும், பொறுமை, தயை, கருணை, புகழ் நிறைந்த தவத்திரு ஜெயபதாக சுவாமி மஹாராஜ் குரு தேவரே உங்கள் பெருமையை சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை. இருந்தாலும் உங்கள் கருணையின் மூலமாகவும் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப்பாதங்களின் உதவியால்தான் உங்கள் புகழை சொல்ல விரும்புகிறேன். குருதேவா எப்படி நீங்கள் எப்பொழுதும் அன்று மலர்ந்த ரோஜாவைப்போல் புன்முறுவலுடன் இருக்கிறீர்கள். குருதேவா உங்கள் தள்ளாத வயதில்கூட என்றும் இளமையாக இருக்கின்றீர்கள். நீங்கள் மேலை நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் உள்ள கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிக்க எப்பொழுதும் பிரயாணம் மேற்கொண்டு ஜடப்பற்று, பெளதிக பற்று உள்ள கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிக்க எப்பொழுதும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறீர்கள். உங்களது கருணை யாருக்குமே வராது. தங்கத்தின் மதிப்பை கண்டு பிடிக்கமுடியும். குருதேவா ஆனால் உங்கள் மதிப்பை கண்டுபிடிக்கவே இயலாது. குருதேவா நீங்கள் எங்களுக்கு கிடைத்தது ரொம்ப ரொம்ப நாங்கள் அதிர்ஷ்டம் செய்து உள்ளோம். குருதேவா, எங்கள் வாழ்க்கையில் இருண்டு இருந்த எங்களுக்கு வெளிச்சத்தை உண்டு பண்ணியிருக்கிறீர்கள். குருதேவா எப்பொழுதும் உங்கள் பார்வை எங்களுக்கு கிடைக்க வேண்டும். குருதேவா நான் உங்களை முதன்முதலில் கோவை ரதயாத்திரையில் தான் உங்களை பார்த்தேன். உங்களின் ஆன்மீக குரு ஸ்ரீல பிரபுபாதரின் மூலமாக நான் 16 மாலைகள், 4 கட்டுப்பாட்டு விதிகள் மூலமாக எனக்கு தீக்ஷை கிடைத்தது. எனக்கு தீக்ஷை கிடைத்தது எனக்கு மறுபிறவி இல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணரிடம் செல்வதற்கும், அடைக்கலம் தருவதற்கு உதவியாக இருக்கும். இந்த தீக்ஷை திருவிழா உங்கள் புகழ் மூவுலகிலும் பரவவேண்டும். இன்னும் எண்ணற்ற கட்டுண்ட ஆத்மாக்கள் இருக்கின்றார்கள். எல்லோரையும் விடுவிக்க நீங்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப்பாதங்களில் நான் வேண்டிக்கொள்கிறேன். உங்கள் சேவையை வையகம் முழுவதும் போற்றவேண்டும். குருதேவா நீங்கள் உங்கள் ஆன்மீக குரு அ.ச.பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர் காட்டிய வழியில் உங்கள் சேவையை கிராமந்தோறும், நகரந்தோறும் நீங்கள் வழிகாட்டியாக இருக்கின்றீர். அதுபோல் உங்கள் சேவையை நாங்கள் எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும் என்று எங்களுக்கு பக்தி சேவையை கொடுக்குமாறு தாழ்மையுடன் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அதுபோல் ஆன்மீக குருவின் சேவையே சீடர்களின் சேவை என்று ஒத்துக்கொள்ள வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம். குருவை எப்பொழுதும் போற்றி புகழ வேண்டும். எனக்கு குரு கிடைத்தது பெரும் அரிய வாய்ப்பு. ஆன்மீக குரு ஸ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதியாவார். அவர் எப்பொழுதும் சாஸ்திர, சம்பிரதாயங்கள் மூலமாக கடைபிடிப்பவர் ஆவார். ஆச்சார்யர்கள், சீடப்பரம்பரை மூலமாக நமக்கு கிருஷ்ண உணர்வை உணர்த்துகிறீர்கள். குருதேவா உங்கள் கருணையின் மூலம் எல்லா மக்களும் நாடுதோறும், கிராமந்தோறும் நாம சங்கீர்னத்தை விநியோகம் செய்கிறீர்கள். ஆன்மீக குருவே நீங்கள் இல்லாமல் ஸம்ஸாரக்கடலை கடக்க இயலாது. ஆன்மீக குருவே உங்களை சாதராண மனிதராக நினைப்பதும் குற்றம். உங்களின் கட்டளைகளை மீறுவதும் குற்றம் ஆகும். உங்கள் புகழ், கருணை கடலின் அலைகள் போல வீச வேண்டும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே/ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே பார்புகழும் பாரத மண்ணில் உங்கள் நாம சங்கீர்த்தனம் கொடிகட்டி பரவட்டும். எல்லா வளமும் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி ஆன்மீகு குருவிற்கே. எல்லா வளமும் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி ஆன்மீக குருவிற்கே. எல்லாவளமும் ஸ்ரீ கௌரங்காவிற்கே. எல்லா வளமும் ஸ்ரீல பிரபுபாதாவிற்கே.

கிருஷ்ணாங்கி கோபிகா தேவி தாஸி, துறையூர்

Kṛṣṇangi Gopika Devī Dāsī (Diksa),
Thuraiyur, India