Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Dayasindhu Śrīnivasa Dāsa (Coimbatore - India)

ஹரே கிருஷ்ண,

எல்லாப்புகழும் குரு கிருஷ்ணருக்கே

ஓம் அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா
சக்ஷூருன் மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குருவே நம:

நம ஓம் விஷ்ணு-பாதாய கிருஷ்ண-ப்ரேஷ்டாய பூ-தலே
ஸ்ரீமதே ஜெயபதாகா-ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய்-க்ருப-ப்ரதாயினே
கௌர-கத தாமதாய நகர-க்ராம தாரிணே

தங்களின் பாதங்களில் உள்ள எனக்கு என்னு:டைய பணிவான மரியாதை கலந்த வணக்கங்கள் எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதாவிற்கே

எல்லாப்புகழும் இப்பூவுலகில் தாங்கள் இப்புனித நாளில் தங்களுக:கு அர்ப்பணம்.

ஸ்ரீமத் பாகவதம் 4.30, 37

தேஷாம் விசரதாம பதப்யாம் தீர்தானாம் பாவனேச்சயா

பீதஸ்ய கீம்த ரோசேத தாவகானாம் ஸமாகமம்

போற்றுதற்குரிய பகவானே உமது தூய பக்தர்ளும் துணைவர்களும் புனிதமான ஊர்களை கூட தூய்மை செய்வதற்காக இவ்வுலகம் முழுவதும் சஞ்சரித்துக்கொண்டிருக்கின்றனர். உண்மையாகவே உலக வாழ்வினை கண்டு அஞ்சுபவர்களுக்கு இச்செயல் மகிழ்ச்சி அழிக்காதா என்ன?

இரண்டு வகையான பக்தர்கள், ஒன்று ‘கோஷ்டாநந்தீ” இரண்டு ‘பஜனாநந்தீ” இதில் கோஷ்டாநந்தீ உலகம் முழுவதும் பயணம் செய்து பக்தர்களின் எண்ணிக்கையை பெருக்குகிறார். இதுவே அவருடைய அஐச இத்தகைய மஹாத்மா உலகம் முழுவதும் சுற்று பயணம் செய்து இவ்வுலகில் உள்ள எல்லா இடத்தைiயும் மக்களையும் புனிதப்படுத்துகிறார். இதுவே பகவான் மஹா பிரபுவின் ஆசை. அவருடைய பக்தர்கள் உலகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்த கிருஷ்ண பக்தியை பரப்பவேண்டும் அதை தாங்கள் ஸ்ரீல பிரபுபாதரின் பாதச்சுவடுகளை பின்பற்றி செய்து காண்பிக்கிறீர்கள்.

தங்களை அடைந்ததில் நான் மிகவும் பேரதிர்ஷ்டம் nச்யது இருக்கிறேன். ஏனென்றால் இந்த மனித குலத்திற்கு தேவையான உண்மையான பர உபகாரமான கிருஷ்ண பக்தியை எவ்வாறு கொடுக்கவேண்டும் என்பதை முன்னுதாரணமாக எங்களுக்கு காட்டி வருகிறீர்கள்.

ஆதலால் தாங்கள் கிருஷ்ண பக்தியின் ஆழத்தையும் மற்றும் என்னுடைய வாழ்நாளில் நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் கிருஷ்ண பக்தியை கொண்டு சேர்ப்பதற்கு என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என தங்களை பிரார்த்திக்கிறேன்.

எல்லா ஆத்மாக்களிடமும் எனக்கு ஜீவ கருணையை காட்ட அருள் புரிய வேண்டும்.

இப்படிக்கு

உங்கள் அன்பு தாஸன்

தயாசிந்து ஸ்ரீவாஸ் தாஸன்

Dayasindhu Śrīnivasa Dāsa (Dīkṣā),
Coimbatore, India