Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Gāndharvikā Mohinī Devī Dāsī (Thuraiyur - India)

வியாச பூஜை சமர்ப்பணம்

 

எங்களுடைய உயிருக்கு உயிரான

ஆன்மீக தந்தையும், குருவுமாகிய

தவத்திரு ஜயபதாகா ஸ்வாமி மஹாராஜரின்

பொற்பாத கமலங்களுக்கு எங்களுடைய

பணிவு கலந்த நமஸ்காரங்கள் உரித்தாகுக! 

 

குமாரர்களுக்கு ஆன்மீக அறிவு எனும் சக்தி வழங்கப்பட்டுள்ளது

நாரதருக்கு பக்தித்தொண்டு எனும் சக்தி வழங்கப்பட்டுள்ளது

பிருது மகாராஜருக்கு நிர்வாக் கடமைக்குரிய சக்தி வழங்கப்பட்டுள்ளது

அதுபோலவே, எங்களுடைய குருவிற்கு ஸ்ரீல பிரபுபாதரின்

கனவை நனவாக்கும் சக்தி வழங்கப்பட்டுள்ளது! 

 

பரமபுருஷருக்கு செய்யும் பக்திதொண்டு வீணாவதில்லை

பக்தன் முழு பக்குவத்தை அடையும் வரை

அது அதிகரித்துக் கொண்டேபோகிறது

அதுபோலவே, குருவிற்கான சேவை வீணாவதில்லை

அது பக்தனுக்கு பகவானின் அந்தரங்கத்தை அதிகப்படுத்துகிறது! 

 

உறங்கும்பொழுது ஒருவன் செவிகளால் தான் பாதுகாக்கப்படுகிறான்

இது பூரணத்துவதை அடைய கேட்டறிவதின் அவசியத்தை வலியுறுத்துகிறது

அதுபோலவே, அறியாமையெனும் உறக்கத்திலுள்ள உயிர்வாழியை

ஆன்மீக குருவின் உன்னத ஓசையே துயிலெழுப்பி பாதுகாக்கிறது

இது குருவைச் சரணடையவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது! 

 

தூய பக்தர்களைக் காத்தருளும் ஆன்மீக குருவாக தோன்றியுள்ள

ஸ்ரீ பலராமர் பகவானின் கருணை அவதாரமாவார்,

அதுபோலவே, பாரபட்சமின்றி கட்டுண்ட ஆத்மாக்கள்

அனைவரையும் கரைசேர்ப்பதற்காக தோன்றியுள்ள

தவத்திருவானர் கருணையிலும் கருணையின் அவதாரமாவார்! 

 

நாத்திக நிலையில் உள்ள ஜீவன் பக்குவ நிலையில்

இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்

அதுபோலவே, ஆன்மீக குருவிடம் நம்பிக்கையற்ற

ஜீவன் ஸம்ஸாரக் கடலில் தத்தளிப்பது

நிச்சயம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்! 

 

மாயைக்குட்ட ஜீவன்களை மாயையிலிருந்து விடுவிக்கும்

தூய பக்தர்கள் பகவானுக்கு பிரியமானவராகின்றனர்

அதுபோலவே, தனது குருவின் கட்டளைகளை

நிறைவேற்றுவதில் தனக்கு உதவியாக இருக்கும்

அர்ப்பணிப்புள்ள பக்தர்கள் குருவிற்கு பிரியமானவராகின்றனர்! 

 

பாகவத தர்மத்தை மீண்டும் உபயோகத்திற்கு கொண்டுவருவதின்

மூலமாக எல்லாவகையான தீமைகளுக்கும் பலியாவதிலிருந்து

மனித நாகரீகத்தைக் காப்பாற்றமுடியும்

அதுபோலவே, சீடப்பரம்பரையை விரிவடையச் செய்வதின்

மூலமாக துக்காலயத்தையும் வைகுண்டமாக்கமுடியும்! 

 

இறைஉணர்வற்ற சமுதாயத்திற்கு இறைவனைப் பற்றிய

அறிவில்லை என்பதால் அதனால் மனதை

தூய்மைப்படுத்த முடியாது

அதுபோலவே, குருபக்தியற்ற சமுதாயத்திற்கு குருவின்மீது

நம்பிக்கையில்லை என்பதால் ஆன்மீகதளம் எட்டாக்கனியே! 

 

பகவானின் வசிப்பிடமும் பகவானும்

எல்லாவகையிலும் ஒத்திருக்கின்றனர்

அதுபோலவே, குருவின் உபதேசங்களும்

குருவும் காலவரையற்ற சேவைக்குரியவர்களாக

எக்காலத்திற்கும் ஒத்துபோகின்றனர்! 

 

பகவானின் விருப்பப்படி அனைத்தையும் செய்வதால்

முழு நோக்கமும் நிறைவேற்றப்பட்டுவிடுகிறது

அதுபோலவே, குருவின் விருப்பப்படி செயல்படுவதால்

கடக்கமுடியாத கடலும் கன்றின் குளம்படியாகிறது

நினைத்தற்கரிய பிரேமையும் பிரிக்கவியலா உடைமையாகிறது! 

 

சேற்றை சேற்று நீரால் வடிகட்டுதல் சாத்தியமல்ல

அதுபோலவே, அருவாதிகளும், சூன்யவாதிகளும்

மாயாவாத கொள்கைகளின் மூலமாக

பேரின்பத்தை அடையமுயல்வது சாத்தியமாகாது

பக்திசேவையே பேரின்பத்திற்கான பாதையாகும்! 

 

பகவானிடம் பக்திசெய்ய ஆரம்பிப்பது தற்போதுள்ள

உடலை ஆன்மீகமயமாக்குவதற்கான ஆரம்பமாகும்

அதுபோலவே, குருவிடம் நம்பிக்கை கொள்ள

ஆரம்பிப்பது அஞ்ஞான இருளிலிருந்து

அறிவொளிக்கு வருவதற்கான ஆரம்பமாகும்! 

 

ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்கள்தான் அர்ஜுனனின்

மனதில் இருந்த பௌதிக களங்கங்களைப் போக்கின

அதுபோலவே, குருவின் கருணைதான் நிலையிழந்த

ஆத்மாக்களையும் நிலைபெறச் செய்கிறது ஆன்மீகஞானமற்ற

வறியவனையும் பெறும் செல்வந்தனாக்குகிறது! 

 

வைகுண்ட லோகங்களிலுள்ள பகவானின் உன்னத

உறவு பற்றிய முழு அறிவு பக்தர்களுக்கு உண்டு

அதுபோலவே, உலகெங்கிலும் வலம் வந்து கொண்டுள்ள

நமது தவத்திருவின் உன்னத மகிமையை  

அன்பிற்குரிய சீடர்கள் முழுமையாக அறிவர்!

 

வைஷ்ணவர் ஒருவர் பிறப்புரிமையை ஆதாரமாகக் கொண்டு

மற்றொரு வைஷ்ணவரை அங்கீகரிப்பதில்லை

அதுபோலவே, கருணா மூர்த்தியான தவத்திருவானவர்

பாரபட்சமின்றி அனைவருக்கும் தனது திருவடி நிழலில்

அடைக்கலம் கொடுத்து காத்தருள்கின்றார்!

 

ஒவ்வொருவருக்கும் இந்த பௌதிக உலகிற்கு

வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு

அதுபோலவே, நமது ஜகத்குரு இந்த பெளதிக

உலகிற்கு வருவதற்கு காரணம் பரம்பரை வழியில்

கட்டுண்ட ஆத்மாக்களை விடுவிப்பதற்கே!

 

கிருஷ்ணர் நம்மை அதிகாரப்பூர்வமான

ஆன்மீக குருவுடன் தொடர்புபடுத்துகிறார்

அதுபோலவே, தவத்திருவானர் நம்மை

பிரபுபாதருடனும், கிருஷ்ணருடனும்

மிக எளிதாக உறவுகொள்ளவைக்கிறார்!

 

பௌதிக மக்களுக்கு புலனின்பமே பிரதானம்

அஸத் சங்கமே பேரின்பம் அறியாமையே ஆனந்தம்

அதுபோலவே தவத்திருவின் குழந்தைகளுக்கு

தந்தையின் சேவையே பிரதானம் குருவின் சங்கமே

பேரின்பம் தீனபந்துவின் இலட்சியமே உயிர்மூச்சு!

 

இவ்வாறாக குருவிற்கான சேவையில்

என்றென்றும் நிலைத்திருக்க யாசிக்கும்

அற்பமாகிய கந்தர்விகா மோகினி தேவி

தாஸியும் குடும்ப அங்கத்தினர்களும் 

துறையூர் பக்தர்கள் குழாமும்