Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Viśveśvarī Gopī devī dāsī (Coimbatore - India)

எனது அன்பான குரு மஹாராஜரே!

தங்களது தாமரை திருப்பாதங்களுக்கு எனது கோடான கோடி நமஸ்காரங்களை பணிவுடன் சமர்ப்பிக்கின்றேன். தங்களது வியாச-பூஜை திருநாளில் உங்களது தாழ்மையான சேவகியின் ஒரு சிறு அர்ப்பணிப்பு.

ஹரே கிருஷ்ண! குரு மஹாராஜரே!! எத்தனையோ கோடி ஜன்மங்கள் அனாதையாய் கிருஷ்ணருடன் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன். உங்களின் அகாரமான கருணையால் குருசீட பரம்பரையுடன் என்னை இணைத்தீர்கள். நான் கோடிகாலமாக மறந்து போயிருந்த உறவை மீண்டும் புதுப்பித்து கொடுத்தீர்கள். எனக்கும் கிருஷ்ணருக்கும் என்ன சம்பந்தம் என்பதை உங்களைத் தவிர வேறு யாரால் கொடுத்திருக்க முடியும். உங்களைத் தவிர வேறு யாரால் இப்படிப்பட்ட கருணையை அளிக்க முடியும். வைஷ்ணவர்கள் எல்லோருமே பர-துக்க-துகீ என்பார்கள். ஆனால் நீங்கள் அதி-பர-துக்க-துகீயாவீர்கள். என்னை போன்ற மிக வீழ்ந்த ஆத்மாவையும் கடைதேற்ற கூடியவர் தாங்கள் மட்டுமே. எப்படி எனது நன்றியையும் வணக்கத்தையும் தங்களுக்கு தெரிவிப்பது, இந்த கடனை எப்படி தீர்ப்பேன் என்று தெரியவில்லை. எப்பொழுதும் உங்கள் விருப்பத்தை அறிந்து உங்களுக்கு சேவை செய்ய கூடிய சூழ்நிலையை உருவாக்கி தருமாறு நான் ஒவ்வொரு முறையும் பிராத்தனை செய்கிறேன். என் குரு மஹாராஜரின் மனநிலையை தெரிந்து அதற்கு தகுந்த மாதிரி என்னை சேவையில் ஈடுபடுத்துங்கள் என்று ஸ்ரீ ஸ்ரீ நிதாய் கௌராங்கர், பக்த பிரகலாத நரசிம்மதேவர், ராதா மாதவர், ஜகன்னாதர், பலதேவர், சுபத்ரா மாதா, சுதர்சன சக்ரதேவர் ஆகியோரிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். உங்களின் அற்புதமான லீலைகளை ஒவ்வொரு பக்தரும் சொல்ல கேட்டு மெய்சிலிர்ந்து போகின்றேன். எப்படிப்பட்ட கருணை! எப்படிபட்ட கருணை! உங்களுடைய ஒரு பார்வை என்னை இந்த பௌதீக மாயாவிலிருந்து விடுவித்து பக்தி பாதைக்கு அழைத்து வந்துள்ளது.

நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக பல்லாண்டு காலம் நீடூடி வாழ எனது பிரார்த்தனைகளை எப்பொழுதும் கௌர-நிதாயிடமும், முந்தைய ஆச்சாரியார்களிடமும் செலுத்துவேன்.

அன்பான குரு மஹாராஜரே! நீங்கள் என் மேல் பொழிந்த கருணைக்கு கோடி கோடி வந்தனங்கள். நான் அறிந்தும் அறியாமலும் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். தங்களின் தாமரை திருப்பாதங்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் இனிவரும் காலத்தில் அந்த மாதிரி தவறுகள் எதுவும் செய்யாமல் தூய பக்தி சேவை செய்வதில் ஈடுபடவும், இன்னும் நிறைய புதிய பக்தர்களுக்கு கலியுக தர்மமான ஹரிநாமத்தை கொண்டு சேர்க்கும் உங்களது விருப்பத்தை நிறைவேற்றவும் என்னை ஆசீர்வதிக்குமாறு நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி குருதேவ! நன்றி! நன்றி! நன்றி!!

இன்றும், என்றும் தங்களது பணிவான சேவகி
விசேஷ்வரி கோபி தேவி
தாசி,
கோவை.