Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Vasudā Śakti devī dāsī (Bangalore - Sri Jagannath Mandir Seshadripuram - India)

நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ணா ப்ரெஷ்டாய பூதலே 

ஸ்ரீமதே ஜெயாபதாக  சுவாமின் இதி நாமினே 

நமோ ஆச்சார்ய பாதாய  நித்தாய் க்ருபா பிரதாயினே 

கௌர கதா தாம தாய நகர கிராம தாரிணே 

 

நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ணா ப்ரெஷ்டாய பூதலே 

ஸ்ரீமதே பக்திவேதாந்த சுவாமின் இதி நாமினே 

நாமஸ்தே ஸாரஸ்வதே தேவே கௌர வாணி பிரச்சாரினே 

நிர்விஷேஷ ஷுன்யவாதி பாஸ்சாத்ய தேஷ தாரிணே 

 

என் ஆன்மீக தந்தையே என் மன மார்ந்த பணிவான மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்துகிரேன். 

எத்தனை கோடி மக்கள் வாழும் இந்த உலகில் உங்கள் காரணமற்ற கருணையை என் மீது காட்டி, எந்த தகுதியும் இல்லாத இந்த மிக மிக இழிவான இந்த பாவியை உங்கள் சீடராக ஏற்று கொண்டீர்கள்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒருங்கிணைந்த என் ஆன்மீக தந்தையை பற்றி புகழ எனக்கு வார்த்தைகள் தெரிய வில்லை. மிக மிக கருணை மிக்கவர், தயை மிக்கவர், 26 நற்குணங்களும் கொண்ட வைஷ்ணவர் என் ஆன்மீக தந்தை என்று மட்டும் நான் புரிந்து கொன்டேன்.

பாவியாகிய, என்னை பெற்ற தாய், தந்தை, உறவினர், கணவர், பிள்ளைகள்.... யாராலும் எடுக்க முடியாத என் பாவங்களை தாங்கள் எடுத்து விழந்த ஆத்மாக்களை பகவானிடம் கொண்டு போக சங்கீர்தன் தலைவரான மஹாபிரபுவின் இந்த இயக்கத்தில் இரவும் பகலும் அயராது உழைத்து  தாங்கள் உடல் நிலை பாதிப்படைந்தாலும், தாங்கள் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் மஹாபிரபுவின் சேவையை செய்ய தவரியதே இல்லை.

பிரபுபாதாவின் வார்த்தைகளை நிறைவேற்ற எந்த சூழ்நிலையிலும் தயங்கியதே இல்லை.

இந்த பெளதீக உடலால் பெளதீக இன்னல்கள் வீழ்ந்த ஆத்மாக்களை காப்பாற்ற அனுபவித்தும் சேவை செய்கிறீர்கள். இதை பார்க்க பார்க்க எங்கள் வாழ்க்கையில் ஒரு முன் உதாரணமாக விளங்குகிறீர்கள்.

என் ஆன்மீக தந்தையே எந்த சூழ்நிலையிலும் என் வாழ் நாள் முழுவதும் என் குருவின் வார்த்தையை மதித்து என் குருவிற்க்கு கொடுத்த வார்த்தைகளை நான் நிறைவேற்றி இந்த உலகின் எதோ ஒரு முலையில் அணில் போன்ற, பிரியமான சேவை பிரச்சாரம், புத்தக விநியோகம், அதை கடைசி மூச்சு இருக்கும் வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான பக்தி சேவை செய்யவும், அந்த வார்தைகளை என் வாழ்க்கையில் நடைமுறை படுத்தவும் உங்களின்அன்பான ஆசீர்வாதத்தை வேண்டும் பணிவான மாணவி 

 

வசுதா சக்தி தேவி தாசி (Diksa)

Sri Pancatattva Sevaks, Ramamurthy Nagar, Bengaluru, India