Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2019

Varadaraj.R (Coimbatore - India)

நமஓம் விஷ்ணுபாதாய கிருஷ்ண பிரெஷ்டாய பூதலே

ஸ்ரீமதே ஜெயபதாக ஸ்வாமின் இதிநாமினே

நமோ ஆச்சார்ய பாதாய நித்தாய் கிருப பிரதாயினே

கெளரகத தாம தாய நகரகிராம தாரிணே

அன்புள்ள ஆன்மீக தந்தையே உங்கள் கருணைக்கு ஈடுஇணை இல்லை உங்கள் பக்தி சேவைக்கு நிகர் நீங்களே. தாங்கள் செய்யும் ஸ்ரீ கிருஷ்ண பக்தி மற்றும் ஆன்மீக சேவை எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

அன்புள்ள குரு மஹராஜ் நான் எனது மனைவி இருவரும் வெகு விரைவில் உங்களிடம் தான் ஆன்மீக தீக்ஷை பெறவேண்டும். ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் அதிக வைஷ்ணவ பக்தர்களை உருவாக்கவேண்டும். அதற்கு உங்கள் கருணை எங்களுக்கு தேவைப்படுகின்றது. என்றும் குருமஹாராஜரின் தாமரைப்பாதங்களை நினைத்து சேவை செய்வதையே நாங்கள் விரும்புகிறோம்.

எங்கள் குழந்தைகளான V.R. நிஷாந்த்கிருஷ்ணா V.R.ஷியாம் சுந்தர் இவர்களுக்கும் வைஷ்ணவ சேவை செய்ய உங்கள் கருணை தேவை. குருமஹராஜ் உங்கள் காரணமற்ற கருணையினால் மட்டுமே நாங்கள் பக்தி சேவை செய்யமுடியும். குரு மஹராஜ் தாங்கள் செய்யும் சேவையை பார்த்த தாக்கமே எங்களை பக்தி சேவையில் மேன்மேலும் ஈடுபடச்செய்கிறது. நீங்கள் ஒவ்வொரு பக்தரையும் வழிநடத்தும் விதம் ஒரு தந்தை குழந்தையை கைப்பிடித்து நடை பழக்குவதுபோல் நான் உணர்கிறேன். எப்போது எங்கிருந்தாலும் நாங்கள் உங்களிடம் வைக்கும் பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்கிறீர்கள், தங்கள் குரு பிரேமை மந்திரம் உச்சரிக்கும்போது எங்களுக்கு ஸ்ரீ நரசிம்மதேவர் கருணையுடன் ஆபத்துகளை விலக்கிவிடுங்கள்.

குருமஹராஜ் ஸ்ரீல பிரபுபாதாவின் லட்சியத்தை தாங்கள் தங்களுடைய திருமேனி நிலையை கருதாமல் அயராது உழைத்து கொண்டிருக்கிறீர்கள். தாங்களே குரு பரம்பரையில் சக்தியளிக்கப்பட்ட சிறந்த ஆன்மீக குரு, ஸ்ரீ கிருஷ்ணரிடம் நேரடி தொடர்புள்ள மகிமை பொருந்திய எங்கள் ஆன்மீகத்தந்தை. ஒவ்வொரு பிறவியிலும் நீங்களே எங்களுக்கு ஆன்மீக குருவாக வரவேண்டும். தயவுசெய்து எங்களை கைதூக்கி தங்கள் தாமரைப்பாதங்களில் ஒரு தூசியாக வைத்துக்கொள்ளுங்கள்

அன்புள்ள குருமஹராஜ் உங்களை புகழ்ந்து பேச எனக்கு தகுதியில்லை, அதனால் நாங்கள் செய்யும் ஆன்மீக செயல்களின் புண்ணியத்தை குருமஹராஜருக்கு மனதார சமர்ப்பிக்கிறோம்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள மகன்/மகள்

R.வரதராஜ்/V.R. பிரியாவதராஜ்

V.R.நிஷாந்த்/V.R.ஷியாம் சுந்தர்