குருதேவ்!
உங்களை நான் முதன் முதலில் கோயம்பத்தூர் ரத யாத்திரையில்தான் கண்டேன். எனக்கு இஸ்கான் (2007) முதல் அறிமுகம். நீங்கள் ரதத்திலிருந்து பிரசாதம் எல்லோருக்கும் எறிவதும்கூட மாபெரும் சிறப்பாக அமைகிறது. எனக்கு அப்பொழுது புரியவில்லை. பின்னாட்களில் புத்தக விநியோகம் செய்யப் போகும் பொழுது எல்லாரும் அந்த சாமி வந்திருக்கிறாரா, உடல்நிலை நலமாக உள்ளதா என்று அன்புடன் விசாரிப்பார்கள். நீங்கள் எந்த அளவிற்கு மற்றவர் மனதில் இடம்பிடித்து உள்ளீர்கள் என்று.
பெரிய கர்த்தாள்களை எடுத்து வாசித்துக்கொண்டு தேரிலிருந்து இறங்கி பாதி தொலைவில் ஆடுவதும், உங்கள் தலையில் கட்டியுள்ள டர்பன் மற்றும் உங்கள் உற்சாகமான ஆட்டத்தையும், உங்கள் புன்னகையும் எங்களை நீங்கள் எளிதில் கவர்ந்து விடுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் கிருஷ்ணரின் பிரதிநிதி அதனால் பகவான் எல்லாரையும் கவர்ந்து இழுக்கிறாரோ அதுபோன்றே நீங்களும் ஒவ்வொருவரையும் எளிதாக கவர்ந்து இழுக்கின்றீர்கள்.
குருதேவ்!
பகவானிடம் பிரார்த்தனை செய்ய மொழி எதுவும் அவசியமில்லை என்று ரதயாத்திரை மாலைநேர உபன்யாசத்தில் கண்டுகொண்டேன். கிருஷ்ணர் மாறுவேடத்தில் படகோட்டியாக கோபியர்களுடன் செல்லும்போது காற்று பயங்கரமாக வீசியதாக நீங்கள் சொன்னதை தவறாக தமிழில் மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் உடனே செயல்மூலமாக செய்துகாட்டி எல்லாருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கினீர்கள். ஏனெனில் உங்களுக்கு மொழி அவசியமில்லை, தாங்கள் கிருஷ்ணரின் பிரதிநிதி.
குருதேவ்!
கிருஷ்ணர் இருக்கும் இடம் எல்லாம் ஆனந்தம் என்று உங்களை கண்டபின்புதான் உணர்ந்தேன். உடல் முடியாத சூழ்நிலையில் தந்தை குழந்தைக்கு விளையாட்டு காட்டுவதுபோல் முடியாத சூழ்நிலையிலும் எல்லா பக்தர்களையும் சந்தோஷப்படுத்துகிறீர்கள். நீங்கள் பிரசாதம் எடுக்கும்போதுகூட கரண்டி அங்கும் இங்கும் நீங்கள் முன்பின் செல்லும் போது பிரசாதம் கீழேவிழாமல் இருக்க கீழே ஒருவர் கரண்டியை பிடித்து வருவதும்.
தந்தை மகனை விசாரிப்பதுபோல் ஒவ்வொரு பிரம்மச்சாரி சிஷ்யரையும் உடல்நிலை எப்படி உள்ளது, குடும் நிலை என எல்லாவற்றையும் விசாரிக்கும்போது, நீங்கள் உங்கள் கருணையை வெளிப்படுத்துகிறீர்கள். நீங்கள் கிருஷ்ணரின் பிரதிநிதி என்பதால் ஆனந்தத்தையும், அன்பையும் எளிதாக வழங்குகின்றீர்கள்.
குருதேவ்!
2014ல் மாயாபுர் பரிக்ரமா வந்தபின்பு உங்களை கண்டபின்புதான் புரிந்தது. கிருஷ்ணர் எல்லா பொறுப்புகளையும் தேவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, பக்தர்களுடன் மட்டும், கோப, கோபிகைகளுடன் ஆனந்தமாக இருக்கிறாரோ, நீங்களும் ஒவ்வொரு இடத்திலும் வந்து மகாபிரபுவின் லீலைகளை பேசுவதும் அவர்களுக்கு ஆனந்தம் கொடுப்பதுவமாக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் கிருஷ்ணரின் பிரதிநிதி.
குருதேவ்!
கோலோகத்தில் எப்பொழுதும் சங்கீர்த்தனம், நீங்கள் இருக்கும் இடமும் அதுதான் நடக்கிறது. நீங்கள் ரதயாத்திரை வரும்போது கோயிலில் மற்றும் எல்லா இடங்களிலும் பகவான் கீர்த்தனை பாடிக்கொண்டேயிருப்பதை நான் கண்டுஉள்ளேன். ஏனெனில் நீங்கள் கிருஷ்ணரின் பிரதிநிதி.
குருதேவ்!
குமாரர்களை கண்டதில்லை. ஆனால் உங்கள் புன்னகையும், குழந்தைபோன்ற முகமும் காணும்போது ஆன்மீகத்தில் முதிர்ந்தவர்களுக்கு உடல்மாறுவதில்லை என்பதை கண்டகொண்டேன். கிருஷ்ணர் எப்படி எல்லோரையும் தன் அழகு புன்னதை மூலம் வசீகரிக்கின்றாரோ, நீங்களும் எங்களை வசீகரிக்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் கிருஷ்ணரின் பிரதிநிதி.
குருதேவ்!
உங்கள் பின்வரும் பக்தர்களை கண்டபின்புதான் நீங்கள் பிரபுபாதாவின் வெற்றிக்கொடி (Jayapatha) என்பதை புரிந்துகொண்டேன். இதுவே உங்கள் புகழ். ஏனெனில் நீங்கள் கிருஷ்ணரின் பிரதிநிதி.
குருதேவ்! கிருஷ்ணருக்கு எப்போதுமே கோபகோபிகளுடன்தான் இருக்க விரும்புவார். (உதாரணம்- கோவர்த்தனகிரி- இந்திரன்) தேவர்கள் புகழ்வது எல்லாம் விரும்புவதில்லை. நீங்களும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பக்தர்களுடன் மட்டும்தான் இருக்கிறீர்கள். கடினமான சூழ்நிலையிலும்கூட, அதுவே நீங்கள் கிருஷ்ணரின் பிரதிநிதி உங்களால் மட்டுமே முடியும்.
குருதேவ்!
கிருஷ்ணரின் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினால் எக்ஙளுக்கு மறுபடியும் உற்சாகம் அளிக்கிறீர்கள். நீங்கள் எல்லா இடத்திலும் வாழ்ந்துகாட்டுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் பிரபுபாதவின் வெற்றிக்கொடி. உங்களை உலகம் வியந்து நோக்குகிறது.
குருதேவ்!
நீங்கள் சாந்திபுர் festival கிளம்பிவிட்டேன் என்று ஒரு தகவல் அளித்திருந்தீர்கள், உங்கள் நம்பிக்கை பிரசாதம் உண்டால் கோவிந்த பிரேமை கிடைக்கும் என்று கூறியது என்னை சிலிர்க்கவைத்தது. இந்த உடல்நிலையிலும்.
குருதேவ்!
கிருஷ்ணரின் கருணையை உங்கள் மூலம் கண்டுகொண்டேன். என்னையும் உங்கள் தொண்டனாக ஏற்றுக்கொண்டதின் மூலமாக.
பிரபுபாதாவின் வெற்றிக்கொடிக்கு ஜெய்ஜெய்.
பிரேமராஜ கெளராங்கா தாஸர்
இஸ்கான் கோயம்பத்தூர்