Hare Krishna!
Dhandavath Pranam Guru Maharaj!
என்னை உங்களது சிஷ்யர்களில் ஒருவனாக்கியதற்கு பேருவகை கொள்கிறேன். உங்களுடைய ஆணைகளை என்னுடைய சிக்ஷா மற்றும் மூத்த பக்தர்களிடம் கேட்டறிந்து என்னால் ஆன அளவு ஸ்ரீல பிரபுபாதரின், உங்களின் சேவையில் ஈடுபடுகின்றேன் என்று உறுதியளிக்கின்றேன்.
உங்களின், முதன் முறையாக 2016 ஆம் ஆண்டு நவதீப் மண்டல பரிக்ரமாவில் தரிசனம் எடுத்துக் கொண்டேன். உங்களை மறுபடி 2017ஆம் ஆண்டு கோயம்பத்தூரில் தரிசனம் எடுத்துக்கொண்டு உங்களுடைய வாப்பு சேவையில் ஈடுபட வாய்ப்பு கிடைத்து, ஒருநாள் முழுவதும் மானசீகமாக சேவை செய்ததனால், நேரடியாக சேவை செய்ய இயலாமல் போனபோது, வருத்தம் இருந்தாலும், எனக்கு தகுதி இல்லை என்று மனசாந்தியுடன் சென்றுவிட்டேன். என்னுடைய (mentor) ஆன்மீக ஆலோசகர் என்னை பக்தி விருக்ஷா சேவையில் ஈடுபடுத்தினார். மேலும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தக சேவையிலும் ஈடுபடுத்தினார். குரு சிஷ்ய IDC வகுப்புகளில் கலந்து கொண்டபோதுதான் அறிந்துகொண்டேன், குரு மஹராஜ் அவர்களின் சேவையில் வாணி சேவையும் செய்யலாம் என்று. நான் உங்களிடம் இரண்டாம் பிறப்பெடுத்து, உங்களின் கீழே, மூத்த வைஷ்ணவர்களின் கீழே சேவை செய்து சேவை செய்து என்னைப்போன்று இழிவான நிலையில் இருப்பவர்களை கிருஷ்ணரின், வைஷ்ணவர்களின் சேவையில் ஈடுபடுத்த முயற்சி செய்து கொண்டுள்ளேன். உங்களுடைய ஆசிகளையும், வைஷ்ணவர்களுடைய ஆதரவுகளையும் பகவான் கிருஷ்ணரின் கருணையையும் உங்களிடம் வேண்டிக் கேட்டுப்பணிகின்றேன்.
தங்களின் சேவையில் என்றும்
குமுதவன கோவிந்த தாஸ்
மற்றும், ஆஸ்வரி, தரணி, சூர்யா
Iskon. Coimbatore. Tirupur.