ஹரே கிருஷ்ணா
தீக்ஷை குரு மந்திரம்
நம் ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண ப்ரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே ஜெயபதாக ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சார்ய பாதாய நிதாய் க்ருப ப்ரதாயினே
கெளர கதா தாம தாய நகர கிராம தாரிணே
சிக்ஷா குரு பிரணாம மந்திரம்
நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரெஷ்டாய பூதலே
ஸ்ரீமதே பக்தி வேதாந்த ஸ்வாமின் இதி நாமினே
நமஸ்தே ஸரஸ்வதி தேவே கெளர வாணி பிரசாரிணே
நிர்விஷேச சூன்யவாதி பாஸ்சத்ய தேச தாரிணே
பஞ்ச தத்வ மந்திரம்
ஜெய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்த
ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாஸாதி கெளர பக்த வ்ருந்த
ஹரே கிருஷ்ண மஹாமந்திரம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
அன்பும், பரிவும், கனிவும், பொறுமையும், தயை, கருணை, புகழ் நிறைந்த தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹாராஜ் குரு தேவருக்கு எனது அன்பு வணக்கங்கள். உங்கள் பிறந்த நாள் வாழ்விற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
“நீண்ட நீண்ட காலம் நீங்கள் நீடு வாழ வேண்டும். நீங்கள் வானம் தீண்டும் தூரம் நீங்கள் வளர்ந்து வாழ வேண்டும். அன்பும் வேண்டும், அறிவும் வேண்டும், பண்பும் வேண்டும், பரிவும் வேண்டும், எட்டுத்திக்கும் புகழ வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும். உலகம் பார்க்க உங்கள் பெயரை நிலவுத்தாளில் எழுத வேண்டும். சர்க்கரைத் தமிழள்ளித் தாலாட்டு நான் சொல்லி வாழ்த்துகிறேன்.”
குருதேவா நீங்கள் எனக்கு கிடைத்ததற்கு மிகவும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் எப்பொழுதும் மேலை நாடுகளிலும் வெளி மாநிலங்களில் உங்கள் நீங்கள் உங்கள் குரு சொன்னவற்றை அப்படியே செயல்படுத்துகின்றீர்கள். இன்னும் எத்தனை கட்டுண்ட ஆத்மாக்கள் காத்துக் கொண்டு இருக்கும். அவர்களை நீங்கள் விடுவிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். உங்களுடைய கருணையின் மூலமும் கிருஷ்ணரின் கருணையின் மூலமும் எனக்கு பக்தித்தொண்டு கிடைத்தது. அதனை நான் ரொம்ப மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளேன். சீடர்களின் சேவை ஆன்மீக குருவை திருப்திபடுத்துவதேயாகும். வாணி சேவையை விட வாபு சேவை மிக மிக சிறந்ததாகும். குரு கிடைப்பதற்கு முன் ஜென்மத்தில் ஏதாவது ஒரு நன்மை செய்து இருக்கவேண்டும். குருவே நேரடியாக நாங்கள் கிருஷ்ணரை அடையமுடியாது. உங்கள் கருணையின் மூலமே கிருஷ்ணரை அடையமுடியும். ஆன்மீக குருவானவர் கிருஷ்ணரால் வழியனுப்பட்டவர் ஆவார். குருவானவர் ஆச்சார்யர், சீடப்பரம்பரை மூலமாக நமக்கு கிருஷ்ண உணர்வை உணர்த்துகிறார். குரு பார்க்க கோடி நன்மை ஆகும். குரு ஜடப்பற்றில் இருந்தும், பெளதீகப்பற்றில் இருந்தும் நம்மை விடுவிக்கிறார். குரு கிடைக்கவில்லையென்றால் நம் வாழ்க்கை சூன்யமாகி இருக்கும். உங்கள் கருணை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். நீங்கள் இந்த வயதில் எத்தனை சுறுசுறுப்புடனும் மகிழ்ச்சியுடனும் செயல்படுகின்றீர் உங்கள் சுறுசுறுப்பும் மகிழ்ச்சியும் எப்பொழுதும் எனக்கு கிடைக்கவேண்டும். எனக்கு உங்களை போற்றி புகழ்ந்து பேச எந்த தகுதியும் இல்லை. ஆகையால் கிருஷ்ணரின் கருணையினால் உங்களை புகழ்ந்து பேசுகிறேன். முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை தெரியப்படுத்துவதும் நீங்கள் தான் குரு குருவிற்கு எப்பொழுதும் தீவிர நம்பிக்கையுடன் நாம் சேவையை செய்யவேண்டும்.
Kṛṣṇāṅgī Gopikā devī dāsī
Nithai venu vana Chandra
Thuraiyur