என் அன்பிற்குரிய ஆன்மீக குரு தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி குரு மஹாராஜ் அவர்களின் தாமரை பொற் பாதங்களுக்கு என் பணிவு கலந்த அனேக கோடி கோடி நமஸ்காரங்கள்.
குருவுடன் ஆன தொடர்பு என்பது பகவானுடன் ஆன மறைமுகத் தொடர்பு என்பதை உணர்ந்த ஒவ்வொரு சீடனும் குருவின் ஒப்பற்ற பெருமையை உணர்ந்து அவருடன் தன்னையே ஒப்படைக்கின்றார்கள். அவ்வாறே நானும் என்னை முழுமையாக அவருடன் ஒப்படைப்பதும் அவரது இடைவிடாது தொடர்பினால் என்னை ஜடக் களங்கங்களின் இடைவிடாத “மாயா” வலையில் இருந்து விடுவித்துக் கொள்ள முயற்சிப்பேன்.
மேலும் குரு சீடர் என்றும் நித்திய பந்தத்தினை மேன்மேலும் வளர்த்துக் கொண்டேயிருக்கவே விரும்புகின்றேன்.
குரு மஹாராஜர் வாழ்க!
எப்பொழுதும் உங்கள் கருணையை
யாசித்து நிற்கும் பணிவான சேவகன்
ஆதி புருஷ நித்தாய் தாஸ்
துறையூர்