3.4.21
திருவள்ளூர்
ஹரே கிருஷ்ண!
நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண ப்ரஷ்டாய பூதலே
ஸ்ரீ மதே ஜெயபதாக ஸ்வாமின் இதி நாமினே
நம ஆச்சரிய பாதாய நித்தாய் க்ருபாய் பிரதாயினே
கௌர கதா தாமதாய நகர கிராம தாரினே
நம ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண ப்ரஷ்டாய பூதலே
ஸ்ரீ மதே பக்தி வேதாந்த ஸ்வாமின் இதி நாமினே
நமஸ்தே சரஸ்வதி தேவே கௌர வாணி பிரசாரினே
நிர்விஷேஷ சூண்யவாதி பாக்ஷ்யத்ய தேச தாரினே
ஜெய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபோ நித்தியானந்த
ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாசாதி கௌர பக்த விருந்தா
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம
ராம ஹரே ஹரே!!
ஹரே கிருஷ்ண குருமகராஜ்! தங்கள் தாமரை பாதங்களுக்கு எங்கள் மரியாதையான வணக்கங்கள்! அனைத்து புகழும் ஜகத்குரு ஸ்ரீல பிரபுபாதருக்கே! அனைத்து புகழும் தங்கள் தாமரை பாதங்களுக்கு உரித்தாகுக!!
நான் இந்திரா தேவி (Devi & Gurucharan Thiruvallur) தமிழ் நாட்டில் திருவள்ளூர் நாமஹட்டாவை சேர்ந்தவர்கள்.
* ஹரே கிருஷ்ண குருமகராஜ்! கடந்த ஆண்டு தங்கள் வியாச பூஜைக்கு மாயாப்பூர் வருவதற்கு திருவள்ளூர் பக்தர்கள் திட்டமிட்டோம். கொரனாவால் வர இயலவில்லை குருமகராஜ். ஆனால் தங்கள் தனிப்பெருங்கருணையால் தாங்களே zoom-ல் தரிசனம் தந்தீர்கள்.
குருமகராஜ் கீ... ஜெய்!
* கடந்த ஆண்டு தங்கள் வியாச பூஜைக்கு நான் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். நீங்கள் எனது கடிதத்தை படித்தீர்கள் என்பதை வலைதளம் மூலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குருமகராஜ்!
குருமகராஜ் கீ... ஜெய்!
*இந்த ஆண்டு நாங்கள் புது வீடு கட்டி குடியேறியுள்ளோம் குருமகராஜ். ஆனால் கொரனாவால் பக்தர்களை அழைக்க இயலவில்லை. எங்கள் சீக்ஷா குரு, ஸ்ரீ குரு சேவானந்தி மாதாஜியிடம் "குருமகராஜ் வீட்டிற்கு வர வேண்டும். எப்படி அழைக்க வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "குருமகராஜ் வீட்டிலுள்ள நிழற்படத்திலேயே உள்ளார். CCTV போல. அவரிடமே கேளுங்கள்" என்றார். நானும் என் மகன் குருசரணும் தங்களிடம் கோரிக்கை வைத்தோம். நம்பமுடியாத வகையில் குருமகராஜ் தங்கள் காரணமற்ற கருணையில் நாங்கள் திளைத்தோம். ஜெகநாதரே virtual ரத யாத்திரை என்று வீட்டிற்கு வந்துவிட்டார். உங்களின் ஆசிர்வாதமும் கிடைத்தது குருமகராஜ்.
குருமகராஜ் கீ... ஜெய்!
* புது வீடு, குருமகராஜ்க்கு எப்படி விருந்து தருவது? வழி இல்லையே என வருந்தினோம். அப்போதும் தங்கள் காரணமற்ற கருணையால், zoom-ல் தங்கள் வியாச பூஜையை காணவும், தரிசனம் பெறவும் ஏற்பாடு செய்தீர்கள் குருமகராஜ். தங்களுக்கு கிருஷ்ண பிரசாத விருந்தளிக்கும் வாய்ப்பையும் எங்களை போன்ற முக்கியதுவமற்ற ஆத்மாக்களுக்கு அளித்தீர்கள். விருந்தினை தாங்கள் விரும்பி ஏற்றதைக் கண்டு நாங்கள் ஆனந்த கூத்தாடினோம். தங்கள் கருணை அளப்பரியது குருமகராஜ்.
குருமகராஜ் கீ... ஜெய்!
* தினமும் zoom-ல் நீங்கள் வழங்கி வரும் சைதன்ய லீலா சொற்பொழிவை கேட்கிறோம் மற்றும் JPS App பதிவிறக்கம் செய்துள்ளோம் குருமகராஜ். வகுப்பில் நீங்கள் கௌரங்கா! கௌரங்கா!! என அறைகூவுகையில் எங்கள் உற்சாகம் ஊற்றெடுக்கிறது குருமகராஜ்.
சைதன்ய மகாபிரபு கீ... ஜெய்!குருமகராஜ் கீ... ஜெய்!
*யாருமற்ற அனாதைகளாக, பல ஆண்டுகளாக எனது பிறந்த நாள் மறந்து போன நிலையில், இந்த ஆண்டு என்னுடைய மற்றும் எனது மகன் குருசரணின் பிறந்த நாளை தங்கள் அருளாசியுடன் இன்பமாக கொண்டாடினோம் குருமகராஜ்! குருமகராஜ் கீ... ஜெய்!
* அது மட்டுமல்ல, இந்த ஆண்டு குருசரணை தாங்கள், தங்கள் Aspiring Disciple- ஆக ஏற்றுக் கொண்டீர்கள். எங்கள் ஆனந்தத்திற்கு அளவில்லை குருமகராஜ்.
குருமகராஜ் கீ... ஜெய்!
* நானும் தங்களிடம் Shelter வாங்க தேர்வு எழுதி, ஸ்ரீ சதாசிவானந்த் பிரபு மூலமாக JPS அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். இதற்கான நேர்முக தேர்வும் முடிவுற்ற நிலையில், தங்களை நேரில் காணவும், திருவள்ளூர் பக்தர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து, Shelter வாங்கவும் காத்திருக்கிறோம் குருமகராஜ்.
குருமகராஜ் கீ... ஜெய்!
* வகுப்பில் நீங்கள் குழந்தைகளிடமும், தங்கள் மகன்கள் மற்றும் மகள்களிடமும் காட்டும் கருணையாண பார்வையையும், ஆசிர்வாதங்களையும், நானும் தங்கள் ஆன்மீக மகளாக பெற மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கிறேன் குருமகராஜ்.
குருமகராஜ் கீ... ஜெய்!
* நீங்கள் இந்த அதிஷ்டமற்ற ஏழை ஆத்மாவிடம் காட்டும் கருணைக்கு ஓர் எல்லையில்லை குருமகராஜ். என்றும் உங்கள் கருணை எனும் குடையின் கீழ் ஆதரியுங்கள் குருமகராஜ். குருமகராஜ் கீ... ஜெய்!
ஸ்ரீல பிரபுபாத் கீ.. ஜெய்!!
ஹரே கிருஷ்ண குருமகராஜ்.
இப்படிக்கு தங்கள் கீழ்படிந்துள்ள ஆத்மா
Devi & Gurucharan Thiruvallur.