ஹரே கிருஷ்ணா எனது பேரன்புக்குரிய குரு மஹராஜரே, தயவு செய்து எனது பிரணாமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். கோடி கோடி தண்டவத் பிரணாமங்கள்.
தேவரீர் மிக மிக அழகாக இருக்கின்றீர்கள். குருதேவ் தாங்கள் இந்த பௌதிக உலகில் எழுந்தருளி இருக்கும் இந்த காலத்தில் நாம் தேவரீரின் லீலைகளை காணப்பெறும் பெரும்பாக்கியம் பெற்றுள்ளோம். தேவரீரின் பிரசன்னம், பாலைவனத்தில் இருக்கும் சோலைவனம் போல் குளிர்ச்சி அளிக்கிறது, இந்த கலியுகத்தின் வெப்பத்தால் தகிக்கப்படும் என்போன்ற ஆத்மாக்களுக்கு. தேவரீரின் பாதகமலங்களில் தஞ்சம் பெறும் ஆத்மாக்களால் இந்த உலகத்திலிருந்து கோலோக விருந்தாவனம் செல்வது முடியாவிட்டால் என்றுமே முடியாது, ஏனெனில் தேவரீரின் பாதகமலங்களை விட உயர்ந்த தஞ்சம் ஏதுமில்லை, அதுவே மிக உயர்ந்த கருணையின் மொத்த வடிவமாகும். மாயையால் என்றுமே வெல்ல முடியாத அசகாய சூரன் தாங்கள். வாழிய வாழிய குரு மஹராஜ்!!!