இலங்கையின் இஸ்கான் கொழும்பைச் சேர்ந்த, துஷ்டநந்தராஜ தாஸ், நிர்மலா கமலா தேவி தாசி மற்றும் அவர்களது மகன், சஞ்சீவ் தங்கராஜா ஆகியோர், தமது அன்பிற்குரிய ஆன்மீக குருநாதராகிய தவத்திரு ஜெயபதாக சுவாமி குருமஹாராஜருக்கு, அவரது 72 ஆவது வியாச பூஜைக்கான தங்கள் ஹ்ருதய அன்பு சமர்ப்பணம்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா குருமஹாராஜ்!
குருமஹாராஜ், உங்களுடைய தாமரைப்பதங்களுக்கு கோடி கோடி வந்தனைகளை நான் பணிவாக சமர்ப்பிக்கின்றேன்.
நான் நிர்மலா கமலா தேவி தாசி, ஸ்ரீ லங்காவிலிருந்து இதை உங்களுக்கு அனுப்புகிறேன். என் பிரபு துஷ்டநந்தராஜா தாஸ் மற்றும் என் மகன் சஞ்சீவ் தங்கராஜா. நானும் என் கணவரும் உங்களிடம் தீட்சை எடுத்த பக்தர்கள். எங்களுக்கு குருமஹராஜைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஒரு துளி கூட தகுதியில்லாதவர்கள். ஆனாலும் பகவானுடைய கருணையினாலும், உங்களுடைய கருணையினாலும் பேச முயற்சிக்கிறேன். குருமஹாராஜ், உங்களைப்பற்றி ஒரு துளி என்னால் நிதானமாக பேச முடியுமா என்று தெரியவில்லை. இப்போதே அழுகை வருவது போல் இருக்கிறது உங்களைப் பற்றி பேசும்போது.
நாம் நிறைய பாக்கியம் பண்ணியிருக்கிறோம் குருமஹராஜ். நானும் என் பிரபுவும் தீட்சை எடுத்து ஏழு வருடங்களாகிவிட்டன. தீட்சை எடுத்தது கூட எங்களுக்கு ஒரு வரலாறு போல் இருந்தது. குருமஹாராஜ், நாம் தீட்சை எடுத்தோமா என்பது கூட எங்களால் நம்பவே முடியாத விஷயம். நான் இன்று பதிவு செய்யப்போவது உங்கள் கருணை எவ்வாறு எங்களுக்கு கிடைத்தது என்பதாகும். கோவிட் நேரத்தில் குருமஹாராஜ் நீங்கள் எவ்வாறு எங்களுக்கு உங்கள் கருணையை கொடுத்து எவ்வாறு எங்களுடனேயே இருந்ததை உணர்த்தியத்தைப் பற்றி நான் இந்த பதிவில் கூற விரும்புகின்றேன். இந்த கோவிட் இற்கு முன்னாள் நமது பக்தி வாழ்க்கை நான்கு நியமங்களை கடைப்பிடித்து, 16 மாலைகள் ஜெபம் செய்வதுடன் மிகவும் சாதாரண நிலையிலேயே போய்க்கொண்டிருந்ததது. ஆனால் இந்த கொரோனா எங்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது குருமஹாராஜ், என்ன காரணமெனில், உங்களுடைய அளவில்லாத கருணை குருமகராஜ், இந்த கொரோனாவுடன் நாங்கள் உங்கள் உபன்யாசங்களைக் கேட்க ஆரம்பித்தோம். நிறைய உபன்யாசங்கள் நடைபெறும், இருப்பினும் எங்களுக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு ஆழமாக புரிந்து கொள்ளவும் முடியாது. இருப்பினும் அந்த தருணத்தில் குருமஹாராஜ் உங்கள் பேஸ் புக்கில் உங்கள் உபன்யாசங்களை கேட்க கூடியதாக இருந்தது. மேலும் உங்கள் ஜெயபதாக ஸ்வாமி செயலியில் இணைந்து தொடர்ந்து உங்கள் லீலைகளை கேட்டும் படித்தும் வந்தோம். மேலும் தமிழ் மொழிபெயர்ப்பு ஷாந்த கோபி மாதாஜி மூலம் கேட்க கூடியதாக இருந்தது. எந்த நாளும் எங்கள் வாழ்க்கையில் குருமஹாராஜ் உங்கள் உபன்யாசங்களை கேட்போம். உங்களுக்கு பிரசாதம் நிவேதனம் செய்வோம். இது எங்களுக்கு தினமும் நடந்துகொண்டிருந்த ஒரு விஷயமாக இருந்தது குருமகராஜ். இது எவ்வாறு என்று எமக்கு சொல்ல தெரியவில்லை, ஒருப்பினும் இது ஒரு விதமான உணர்வுபூர்வமாக இருந்தது குருமகராஜ். தினமும் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வருவீர்கள், தினமும் எங்கள் பிரசாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் குருமகராஜ். தினமும் நீங்கள் எங்கள் பிரசாதத்தை ஏற்று உங்கள் பார்வை எங்கள் மீது படுவது என்பது பகவானே வந்து எங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணுவது போல் இருந்தது குருமகராஜ். எங்களால் சொல்ல முடியாத ஒரு தருணமாக இருந்தது அந்த நிகழ்வு.
ஒரு முறை எங்களுக்கு உங்கள் விஷேட கருணை கூட கிடைத்தது குருமஹாராஜ். ஒரு முறை சூம் விஜயத்தின் போது எங்கள் இல்லத்திற்கு குருமஹாராஜ் வந்ததும் சூம் திரை முன் நகராமல் நின்றுவிட்டது. அப்போது குருமஹாராஜ் நீங்கள் நீண்ட நேரம் எங்களை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறீர்கள். நீண்ட நேரம் உங்கள் கருணை மிகு பார்வையை எங்களுக்கு வழங்கியிருக்கிறீர்கள். அதைக் கூட எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை குருமஹாராஜ். விரேஜேஸ்வர பிரபுதான் தொலைபேசியில் அழைத்து எங்களிடம் "என்ன மாதாஜி குருமகராஜ் உங்கள் வீட்டில் ரொம்ப நேரம் நிற்கின்றார்" என்று கேட்டார். அப்போது தான் அதைக்கூட புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. இதனால், இந்த விடயங்கள் இவ்வாறு போய்க்கொண்டிருந்ததனால் குருமகராஜ், நாம் நமது மாலைகள் ஜெபம் செய்யும் அளவை அதிகரித்தோம் குருமகராஜ். நான் அதிகாலை 3 மணிக்கு எழும்பி 3 மணி முதல் 5.30 மணி வரை 25 மாலைகள் ஜெபம் செய்கிறேன் குருமகராஜ். அதே போல் என் பிரபுவும் பகவானின் வழிபாடு பீடம் ( ஆல்டர்) சுத்தம் செய்து, ஒழுங்கு செய்து, அலங்கரித்து, அவரது சேவைகளை செய்து, 4 நியமங்களை கடைப்பிடித்து அவரது கடமைகளை செய்கின்றார். அதே போல் எங்கள் வீட்டில் எப்போதும் உபன்யாசங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். இதற்கு என்ன காரணமெனில் குருமகராஜ், உங்கள் சொற்பொழிவுகளை கேட்டதன் மூலம், அடடா, இந்த உபன்யாசங்கள் இவ்வளவு நன்றாக இருக்கிறதா என்ற உண்மை உங்கள் கருணையால் எங்கள் புத்திக்கு எட்ட வைத்தீர்கள். அதனால் நாம் எந்த உபன்யாசங்களையும் கேட்போம், நான் போகா உணவு சமைக்கும் போதும் உபன்யாசம் கேட்டுக்கொண்டே தான் சமைப்பேன். எங்கள் வீட்டில் மேல் மாடியிலும் கீழ் மாடியிலும் நானும் எனது கணவரும் என்ன செய்துகொண்டிருந்தாலும் ஒரு உபன்யாசத்தை கேட்டுக்கொண்டே தான் இருப்போம். இப்படி எங்கள் அன்றாட வாழ்க்கையில் செய்து கொண்டேதான் இருப்போம் குருமஹாராஜ்.
இந்த மாதிரியான ஆசீர்வாதங்கள் உங்களால் தான் கிடைத்தது குருமஹாராஜ், நீங்கள் தான் எங்களை நகர்த்துகிறீர்கள், உங்களால் தான் இன்று கிருஷ்ண பக்தியை எங்களுக்கு எடுத்துக் கொள்ள முடிந்தது. உண்மையிலேயே நான் இஸ்கானுக்கு வரும் போது எனக்கு தெரியாது குருமஹாராஜ் இப்படி குரு இருக்கிறார் என்றும் தீட்சை எடுக்க வேண்டும் என்றெல்லாம் தெரியாது குருமஹாராஜ். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகவே இவை எமக்கு தெரிய வந்தது. அந்த மாதிரியான சூழ்நிலையில் தான் நாம் தீட்சை எடுத்து இந்த கொரோனா நேரத்தில் அதிகமாக பகவானைப்பற்றி கேட்டல் மற்றும் குருமஹாராஜ் மூலம் அதிக அளவில் புத்தக விநியோகம் என்றெல்லாம் பல சேவைகள் உங்கள் கருணையினாலேயே எங்களுக்கு கிடைத்தது. அந்த கருணையை இன்று வரை, ஏன் நேற்று இரவும் கூட அனுபவித்தோம். உங்களுக்கான நமது பிரசாத நிவேதனத்திற்காக நாம் எத்தனை மணி நேரம் என்றாலும் காத்திருப்போம். அது ஏகாதசியானாலும் உண்ணாமல் உங்களுக்காக காத்திருப்போம், உங்களுக்கு நிவேதனம் செய்து, உங்களைப் பார்த்து, நீங்கள் எமக்கு ஆசிர்வதித்த பின் தான் நாம் பிரசாதம் எடுப்போம். சில சமயங்களில் எங்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் அனைவருடனும் ஒன்றாக குழுவாக கிடைக்கும். எங்களுக்கு குருமஹாராஜ் நீங்கள் எங்களை பார்க்க வேண்டுமென்றது இல்லை குருமஹாராஜ், மாறாக நாங்கள் உங்களை பார்த்தால் போதும், ஏனென்றால் நீங்கள் எப்போதும் எங்கள் நினைவிலேயே தான் இருப்பீர்கள் என்று எமக்கு கண்டிப்பாக தெரியும் குருமகராஜ், அதனால் எங்கள் பிரசாதத்தை நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட, பிரசாதத்தை கொடுக்க முடியா விட்டால் கூட, உங்களுக்காக பிரசாதத்தை மேசையில் எடுத்து வைத்து ஆயத்தப்படுத்தி உங்களுக்காக வைத்திருப்பதே எங்களுக்கு மிகவும் திருப்ப்தியாக இருக்கும் குருமஹாராஜ்.
ஒவ்வொரு தருணமும் எங்கள் திருமண ஆண்டு விழாவிற்கு நீங்கள் ஆசிர்வாதம் வழங்கியது என்ற எல்லா விடயமும் இன்றைய நாள் வரையிலும், ஒரு துளி, நாம் இருந்த இடத்தைவிட ஒரு துளி மேலே வந்து அஹங்காரம் எல்லாம் இல்லாது ஆகி ஒரு பக்தன் இப்படித்தான் இருக்க வேண்டும், பக்தர்களுடன் அன்பு இப்படித்தான் செலுத்த வேண்டும் என்று இப்படித்தான் பக்தர்களை அன்புடன் பராமரிக்க வேண்டும், என்ற ஒவ்வொரு விடயமும் குருமஹாராஜ் உங்கள் பணிவான உபன்யாசங்கள் மூலமாகவும் நீங்கள் காட்டும் கருணை மூலமாகவும், நீங்கள் பார்த்தாலே எங்களுக்கு அவ்வளவு எதோ எனக்கு தெரியவில்லை குருமகராஜ் சொல்வதற்கு, குருமஹாராஜ் எனக்கு உங்கள் எந்த விஷயமும் பார்க்க முடியாது குருமஹாராஜ், நான் அழுது விடுவேன், அழுகை வரும் எனக்கு, இங்கே ஆலயத்தில் கூட சொல்வார்கள் உங்களை புகழ்ந்து பேசுங்கள் என்று சொல்வார்கள், ஆனால் என்னால் பேச முடியாது, எனக்கு தெரியவில்லை குருமகராஜ், ஒரு விளக்கப்படம் பார்த்தால் கூட அழுத்துவிடுவேன். இந்த மாதிரி ஒரு கருணை, இந்த மாதிரி ஒரு உணர்வு எந்த விதத்திலும் நாம் அனுபவித்ததில்லை குருமஹாராஜ்.
இப்போது எனக்கு 56 வயது எனது பிரபுவிற்கு 61 வயது, கடந்த ஏழு வருடங்களாக அதிலும் குறிப்பாக இந்த கொரோனா வந்தது பக்தர்களுக்கு எவ்வளவோ ஒரு வாய்ப்பு, இந்த கொரோனா பகவானாலே கொடுக்கப்பட்டது இதற்காகவோ என்று கூட தோன்றுகிறது குருமஹாராஜ், இல்லாவிட்டால் நாம் ஒரு படி கூட மேலே ஏறி இருக்கமாட்டோம் குருமஹாராஜ். இல்லாவிட்டால் 16 மாலை ஜெபம் செய்து விட்டு அதை மூடி வைத்துவிட்டு அன்றைய தின வேலைகளை செய்து கொண்டே போயிருப்போம். எங்களுக்கு தாம்களுக்கு கூட வர முடியாத சந்தர்ப்பத்தில் குருமஹாராஜ் நீங்கள் ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டுக்கு வருகிறீர்கள் குருமஹாராஜ், அந்த வீட்டுக்கு வந்த விடயத்தை அடுத்த நாள் உங்கள் செயலி (எப்) மூலம் பார்க்கும் போது, மற்றும் யூடியூபில் பேஸ்புக்கில் அந்த தருணங்களை பார்க்கும் போது எங்களால் மேலும் மேலும் மேலும் இந்த பக்தியில் ஈடுபடவேண்டும், நீங்கள் நிறைய கருணை காட்ட வேண்டு என்றும், உங்கள் பார்வையாலேயே, கண்ணால் பார்த்தே உங்கள் கருணையை கொடுக்கிறீர்கள். அந்த ஆசிர்வாதம் போது குருமஹாராஜ். குருமஹாராஜ் என் மகனுக்கு கிருஷ்ண பக்திக்கு தேவையான அவ்வளவு விடயமும் இருக்கிறது, இப்போது அவருக்கு 25 வயது, கனடாவில் மாஸ்டர்ஸ் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு நீங்கள் ஆசிர்வாதம் வழங்குங்கள் குருமஹாராஜ். அவர் சைவ உணவையே உண்ணுகிறார், மற்றும் நான்கு நியமங்களை கடைபிடிக்கிறார், ஆனால் ஜெபம் செய்வது இல்லை குருமஹாராஜ். அவருக்கு உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குங்கள் குருமஹாராஜ். நாங்கள் கண் மூட முன்னாள் அவரை ஒரு பக்தனாக பார்க்க விரும்புகிறேன் குருமஹாராஜ். எங்களுக்கு இன்னும் ஆசிர்வாதம் வழங்குங்கள் குருமஹாராஜ், நான் பக்தி விருக்ஷா செய்கின்றேன். என் பக்திவிருக்ஷா குடுப்பத்தில் உள்ள எல்லோரும் மலைகளை ஜெபம் செய்து உங்களிடம் வந்து சரணடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
ஹரே கிருஷ்ணா குருமஹாராஜ், நான் எழுதியதில் ஏதும் தவறு இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் குருமஹாராஜ். ஹரே கிருஷ்ணா!
வாஞ்சா கல்ப தரூப்யச்ச, கிருபா சிந்துப்ய எவச்ச, பதிதானம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நமஹ!
உங்கள் அன்பு ஆன்மீக மகன் மற்றும் மகள்,
துஷ்ட நந்தராஜ தாஸ், நிர்மலா கமலா தேவி தாசி, சஞ்சீவ் தங்கராஜா ஆகியோருக்காக,
நிர்மலா கமலா தேவி தாசி எழுதியது